அமராவதி ஆற்றுப்படுக்கை - தான்தோனி

வரலாற்றுச் செய்திகள்

கரூர் அருகில்,  கரூர் - திருச்சிப்பாதை பாலத்திலிருந்து இரயில்வே பாலம் வரை அமராவதி ஆற்றுப்படுக்கையில் பண்டைய காசுகள், கணையாழிகள், விலைமதிப்பு மிக்க தொல்பொருட்கள் ஆகியவை கிடைத்த வண்ணம் உள்ளன.

கண்ணன் ஏதிரன், ஸா(த்)தன், ஸா(த்)து, வேள், குறவன், தித்தன், மிதிரன், வேடுவன், உபாசன், தாயன்ஓதலன்ஆகிய பெயர்கள் பொறித்த கணையாழிகள் கிடைத்துள்ளன.

இவை மட்டுமன்றி மிதுனம், ரதத்தில் அரசன், குதிரை வீரன், இருயாணை ஆகிய உருவங்கள் பொறித்த கணையாழிகள் கிடைத்துள்ளன. உரோமனியக்காக அச்சடிக்க பயன்படுத்தும் முத்திரை ஒன்றும் கிடைத்துள்ளது.

ஒரு காலத்தில் ஆறு ஓடும் பகுதி ஊரிருக்கையாக விளங்கியது.

 

அதனால் இந்தப் பொருட்கள் கிடைக்கின்றன. தொல் பொருட்களின் சிறப்பு கருதி அப்பகுதியை நினைவுச் சின்னமாக தமிழ் நாடு அரசு தொல்லியல் தறை அறிவித்துள்ளது.

அமைவிடம் : சென்னையிலிருந்து 390 கி.மீ தொலைவில் கரூர் உள்ளது.  கரூர் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆற்றுப்படுக்கை  உள்ளது

வட்டம் : லால்கு

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 34/த.வ.ப.துறை/நாள்/10.02.97