அருகன் கோயில் - பூண்டி

வரலாற்றுச் செய்திகள்

பொன்னெழில் நாதர் கோயில் என வழங்கப்படும் இவ்கீரில் உள்ள அருகன் கோயில் சோழர் காலக் கட்டடக் கலையில் அமைந்துள்ளது. சமயம் வேறாயினும் தென்னகக் கட்டடக்கலையின் மரபு மாறாமல் கட்டப்பட்டுள்ளது. அடிப்பகுதி கல்லாலும் மேற்பகுதி கதையாலும் ஆன இக்கோயில் விமானத்திற்குப் பல்வேறு சமணச் சுதை உருவங்கள் எழில் ஊட்டுகின்றன. உள்ளே சென்றால் பிரம்மதேவர். சரஸ்வதி. லட்சுமி. சக்கதேஸ்வரி.

பத்மாவதி ஆகியோருடைய சிற்பங்களை காணலாம். ஆதிநாதர். பொன்னெழில் நாதர் எனவும் வழங்கப்படும் ரூலவர் சிற்பம் 3 அடி உயரமுடைய தனிக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

மண்டபத்திலுள்ள தருமதேவியின் திருவடிவம் சிறிது உயரமான பீடத்தில் வடிக்கப்பட்ட தனிச்சிற்பமாகும். தருமதேவியின் வலக்கை தாமரை மலரை ஏந்த இடக்கை வரதமுத்திரையுடன் உள்ளது. தேவியின் இரு

குழந்தை வடிவங்களும். புணிப்பெண் வடிவமும் சிறிய வடிவங்களாக உள்ளன. சம்புவராயனின் பாடல் கல்வெட்டு இக்கோயிலை வீரவீர ஜினால்யம் எனக் குறிப்பிடுகின்றது. நாட்டுப் பிரிவு முதல் . எல்லை கூறி. கல் நடுதல் வரை முழுமையும் பாடலால் அமைந்த கல்வெட்டு இது. கல்வெட்டில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பல்குன்ற கோட்டத்து மெயூர் நாட்டு பூண்டி என்று ஊர் குறிக்கப்பட்டுள்ளது/ சோழர் காலத்தின் சிற்றரசராக இருந்த சம்புவராய அதிகாரிகள் பல கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர்.

இக்கோயிலில் மகாவீரர் முதலான கற்சிற்பங்களும். இருபதுக்கும் மேற்பட்ட சமணச் செப்புத் திருமேனிகளும் இக்கோயிலின் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றன.

அமைவிடம் : சென்னையிலிருந்து 140 கி.மீ தொலைவில் உள்ள ஆரணியில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : ஆரணி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 351/த.வ.ப.துறை/நாள்/21.08.86