அருள்மிகு கைலாகநாதர் கோயில் - ஆலம்பாக்கம்

வரலாற்றுச் செய்திகள்

இக்கோயிலின் மூலஸ்தானம் சிவலிங்கம் ஆவுடையார் வடிவில் உள்ளது. இக்கோயில் சுற்றுப்பிராகாரத்தில் முதலாம் பராந்தகன் காலத்து கல்வெட்டுகள் உள்ளது. இக்கோயில் கருவறை கட்டடஅமைப்பு பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

10-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த முதலாம் பராந்தகன் காலத்தில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் இக்கோயில் “அமரேஸ்வரப் பெருமான்” கோவில் என்றும், இவ்வூரை “நந்திவர்ம மங்கலம்” என்றும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் இரண்டாம் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் இவ்வூரில் உள்ள சிவப்பிராமணர்கள் இக்கோயிலின் கருவூலத்திலிருந்து சிறிது தொகையினைக் கடனாகப் பெற்று அத்தொகையின் வட்டிக்கு இக்கோயிலில் விளக்கெரிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளர் என்பதைக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

அமைவிடம் : லால்குடியிலிந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : லால்குடி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 362/த.வ.ப. (ம) அறநிலையத் துறை(அ.தொ.2) /நாள்/ 08.12.04