அஸ்தகிரிஸ்வரர் கோயில் - வரிச்சியூர்

வரலாற்றுச் செய்திகள்:

வரிச்சியூர் மலையில் மேற்கு சரிவில் சிவபெருமானுக்காக இரண்டாவது குடைவரை வெட்டப்பட்டுள்ளது. சூரியன் மறையும் போது ஒளிக்கதிர்கள் இக்குடைவரையில் உள்ள லிங்கத்தில் விழுவதால் இறைவன் அஸ்தகிரிஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இது சிறிய கருவறை மட்டும் கொண்ட எளிய பாண்டிய கோயிலாகும். இதன் காலம் கி.பி 8-ஆம் நூற்றாண்டு. இதன் அருகில் நீலகண்டேஸ்வரர் இன்னும் மூன்றாவது குடைவரைக் கோயில் உள்ளது. இது கருவறை, முகமண்டபத்துடன் கூடியது. முகமண்டபத்தை முற்காலப் பாண்டியர் தூண்கள் அலங்கரிக்கின்றன. குடைவரையை ஒட்டி ஷப்த மாதர்களின் சிற்பங்கள் உள்ளன. இவற்றின் காலமும் கி.பி 8-ஆம் நூற்றாண்டு ஆகும்.

அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருயது 12 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : மதுரை (வடக்கு)

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 1109/கல்வித் துறை/நாள்/17.06.78