ஆனைமலை

இக்கல்பதுக்கை பரம்ரிக்குளம், ஆழியார் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைப் பகுதியில் கண்டறியப்பட்டது.

 

இவ்வகழாய்வில் கத்தியின் கள்முனைப் பகுதியும், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பானை ஓடுகளும், பெருங்கற்கால ஈமப்பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டது. இவ்வகழாய்வு, ஈமச் சின்னங்களின் வகை மற்றும் ஈமப்பானை வகைகள் பற்றிய செய்திகளை வெளிப்படுத்தியுள்ளது.

 

அகழ்ந்தெடுக்கப்பட்டதொல்பொருட்கள் பெருங்கற்காலத்தைச் சார்ந்தவையாகும். (கி.மு. 1000 முதல் கி.பி 300 வரை)