இரணியன் குடியிருப்பு - இராஜாக்கள் மங்கலம்

வரலாற்றுச் செய்திகள்

இவ்வூரிலுள்ள இரணியன் குடியிருப்பு என்ற பகுதி தொல்லியல் சிறப்புடையதாகும். இங்கு முற்கால பாண்டியர் காலத்தைச் சார்ந்த பல சிலைகள் காணப்படுகின்றன.

இவை உருவில் பெரியவை. ஆழகில் சிறந்தவை. இவற்றுள் சில மதுரை திருமலைநாயக்கர் அரண்மணையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. சிலைகள் பலவற்றுள் அவற்றின் பெயர்கள் கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சிலைகள் உள்ள இவ்விடத்தில் இரணிய மகாராஜாவின் அரண்மனை இருந்ததாக கூறுகின்றனர்.

இரணியன் குடியிருப்பில் அகழாய்வு செய்ததில் இங்கு பெருங்கோயில் ஒன்ஞ இருந்திருக்கக் கூடும் என்று உணரப்பட்டது. ஆதற்கு ஆதாரமாக இங்கு பல

 

கற்சிலைகள் கிடைத்துள்ளன. இவை பாண்டியர் காலக் கலை வரலாற்றுக்குப் பெரிதும் துணை புரிபவை. இங்கு எடுக்கப்பட்ட கற்சிலைகளில் பெரிய நரசிம்மர் சிலை, முருகன் சிலை, தாயமார் எழுவா சிலைகள், எண்திசைப் ணெளூகள் சிலைகள், சாமரம் வீசும் பெண்கள் ஆகிய சிலைகள் அழகு மிக்கவை. இங்கு கோள்களைப் பற்றி சிற்பங்கள் சில கிடைத்துள்ளன. ஒரு சிற்பத்தில் “சதக்ரது” (இந்திரன்) என்றும், “குஜ“ (செவ்வாய்) என்றும் ரூன்றாவதில் புதஹா (புதன்) என்றும், மற்றொன்றில் “யம” (யமன்) என்றும் எழுத்துப் பொறிக்கப்பட்டள்ளது. னெவே கோள்களைப் பற்றியும், திசைக்காவலர்கள் பற்றியும் அறிந்து கொள்கிறோம். இவை தென்னிந்திய சமயக்கலை ஆராய்ச்சிக்கு மிகவும் துணை புரிவனவாகும்.

அமைவிடம் : சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவிலும், மதுரையிலிருந்து 125 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது.

 

வட்டம் : நாங்குநேரி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 7/த.வ.ப.துறை/நாள்/06.01.90