ஓவாமலை கல்வெட்டு
வரலாற்றுச் செய்திகள்
மீனாட்சிபுரத்திற்கு வட எல்லையாக அமையதுள்ளது ஒரு மலைத்தொடர். இதனைக் கழுகு மலை என்றும் ஓவாமலை என்றும் அழைப்பர். இம்மலையின் மேற்பரப்பில் பெரிய குகை ஒன்று அமைந்துள்ளது. சுமார் 60 பேர் அமர்நது பாடம் கேட்பதற்கு வசதியாக சமணப்பள்ளியாக இக்குகை செயல்பட்டுள்ளது.
இக்குகையின் பாறைகளில் ஐந்து இடங்களில் தமிழ் பராமிக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளின் காலத்தை கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர். தமிழகத்தில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகளிலேயே இவைதான் காலத்தால் முற்பட்டவை. இக்கல்வெட்டில் சங்ககாலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் என்ற பெயரும் அவர்களது சிறப்புப் பெயராக வழுதி, கடலன், பணஅன் என்பனவும் குறிப்பிடப்படுகின்றன. வெள்ளறை நிகமம் என்னும் வணிகக் குழுவும் இடம் பெறுகிறது.
வேள்ளறை என்பது இவ்வூருக்கு அருகில் இன்று வெள்ளரிப்பட்டி என்று அழைக்கப்படும் கிராமத்தின் பழம்பெயராக இருக்கலாம். இக்கல்வெட்டுகளில் பல பிராகிருதச் சொற்களும் கலந்து எழுதப்பட்டுள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் இவை. குகைத்தளத்தில் சமண முனிவர்கள் தங்கிய கற்படுக்கைகளும் உள்ளன.
அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருயது 20 கி.மீ தொலைவில் உள்ளது.
வட்டம் : மதுரை (வடக்கு)
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 7/த.வ.ப.துறை/நாள்/06.01.90