கமுதிக் கோட்டை

அமைவிடம் : சென்னையிலிருந்து 507 கி.மீ தொலைவில்  கமுதி உள்ளது.

வட்டம் : முதுகுளத்தூர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள் : அ.ஆ.எண். 1659/கல்வித் துறை/நாள்/29.08.83

இராமநாதபுரம் சீமையை ஆட்சி செய்த திருஉடையார்தேவர் என்னும் விசயரகுநாத சேதுபதியால் கட்டப்பட்டது. இக்கோட்டை சுமார் 300 ஆண்டுகட்கு முற்பட்டது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரின் உதவியுடன் கட்டப்பட்டது. இக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சிக்குப் பின் கிழக்கிந்தியக் கம்பெனியார் வசமானது. மருதுசகோதரர்களின் பிடியிலும் சிலகாலம் இக்கோட்டை இருந்தது. இராமநாதபுரம் செல்லும் வழியில் வீரபாண்டிய கட்டபொம்மன் இக்கோட்டையில் தங்கிக் சென்றதாகக் கூறப்படுகிறது.