கருங்காலக்குடி கல்வெட்டு

வரலாற்றுச் செய்திகள்

கருங்காலக்குடியின் மேற்கில் அமையத ஒரு குன்றின் கீழ் இயற்கையான குகை ஒன்று உள்ளது. இதில் சமணத்துறவியர் தங்கியிருந்த கற்படுக்கைகள் காணப்படுகின்றன. குகையின் நெற்றியில் கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பராமிக் கல்வெட்டு ஒன்று உள்ளது.

ஏழை ஊர் அரிதின் பளிய்  என்பது அக்கல்வெட்டுப் பாடம் ஆகும். இதனை உருவாக்கிக் கொடுத்தவன் ஏழை ஊரை சார்ந்த  அரிதன் என்பவன் ஆவான்.இதன் அருகிலேயே பாறை ஒன்றில் சமணத்தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பம் ஒன்றும் அதன் கீழ் கி.பி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டும் காணப்படுகின்றன. அச்சணந்தி செய்வித்த திருமேனி என்று இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.குகைத் தளத்தின் தரைப்பகுதியில் கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தீர்த்தங்கரரின் சிம்மங்கள் சுமந்த சிம்மாசனம் ஒன்று வெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

 

பாண்டிய மன்னரின் அதிகாரியாக விளங்கிய பள்ளித்தரையன் என்பவனின் செயல்களையும் சிறப்புகளையும் இக்கல்வெட்டு கூறுகிறது. பாறையின் மற்றொரு பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருயது 8 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : மேலூர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள் : அ.ஆ.எண். 7/த.வ.ப.துறை/நாள்/06.01.90