கருங்குழிக்கோட்டை - கருங்குழி

வரலாற்றுச் செய்திகள் :

இக்கோட்டை கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் முகமதியரால் கட்டப்பட்டதாகும். கருங்கல்லால் கட்டப்பட்ட இக்கோட்டைக்கு தெற்கே கிளியாறு என்ற ஆறு கோட்டை அரணாக உள்ளது. இது சிறு ஜமீன்களிடம் இருந்து வரியாக வசூலிக்கப்பட்ட தானியங்களை சேமித்து வைக்கப் பயன்பட்டது. இக்கோட்டை கி.பி.1760-ல் பிரெஞ்சுகாரர்களின் வசம் இருந்தது. பின்னர் 1769-ல் சர் அயர் கூட் என்னும் பிரிட்டிஷ் தளபதி வந்தவாசிக் கோட்டையை முற்றுகையிட்டு வென்ற பின்னர் கருங்குழிக் கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள்.

கி.பி. 1780-ல் நடைபெற்ற ஹைதர் அலியின் படையெடுப்பால் இக்கோட்டையானது ஹைதர் அலியின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பின்பு கி.பி 1781-ல் சர் அயர் கூட் மற்றும் தளபதி டேவிஸ்ஸூடன் ஆயிரம் வீரர்கள் அடங்கிய பெரும்படை இக்கோட்டையை மீண்டும் கைப்பற்றியது. இக்கோட்டையைப் பற்றி ஆர்மி என்பவர் எழுதிய குறிப்பு வறுமாறு “இக்கோட்டையின் நான்கு புறங்களும் பெறும் .

மதில்களால் சூழப்பட்டுள்ளது. இதன்சுற்றளவு 1500 மீ. ஆகும். இது கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது ” கோட்டையின் இருமமூலைகளிலும் இதன்  இரண்டு கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டையின் தளபதி ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த கர்னல் ஓர்நல்லி ஆவார். இக்கோட்டை கி.பி. 1782-ல் சென்னை கவர்னர் லாட் மக்காடனி அவர்களது ஆணையின் பேரில் இடித்து தள்ளப்பட்டது. துற்போது கோட்டையானது முற்றிலுமாகச் சிதைந்து வெறும் கோட்டை மேடாக சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது.

அமைவிடம் : சென்னை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள மதுராந்தகத்திற்கு அருகில் உள்ளது.

வட்டம் : மதுராந்தகம்.

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 316/த.வ.ப.துறை/நாள்/16.09.86