கலிங்கச் சிற்பங்கள் - செங்கமேடு

வரலாற்றுச் செய்திகள்:

கலிங்கச் சிற்பங்கள் -  செங்கமேடு :  முதலாம் இராஜேந்திர சோழனின் படை கங்கை வரைச் சென்று வெற்றிக் கொண்டு கலிங்கநாடு வழியாக திரும்பும் பொழுது வெற்றிச் சின்னமாக கலிங்கச் சிற்பங்களை கொண்டு வரப்பட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் நிர்மானிக்கப்பட்டது.. இக்கலிங்கச் சிற்பங்கள் கி.பி 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.

துர்க்கை, காலி, பைரவர் போன்ற சிற்பங்கள் உள்ளது. பைரவர் சிலை ஒன்றில் கபாலமாலை கால் வரை அணிந்தும், நிர்வாண நிலையில் நான்கு கைகளுடனும், அருகே ஆண், பெண் உருவமும், இடுப்பில் கிண்கிணி, மேகளையில் மணிகளுடன் காட்டப்பட்டுள்ளது.

மேலும் பைரவர், பைரவி உருவங்கள் யோகீஸ்வரி, யோகினி தெய்வங்களின் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கவை ஆகும். கலிங்க நாட்டுச் சிற்ப கலையை அறிந்து கொள்வதற்கு இவை நமக்கு பெரிதும் துணைபுரிகின்றது.

அமைவிடம் : சென்னையிலிருந்து 342 கி.மீ தொலைவில் உள்ளது. தஞ்சையிலிருந்து சுமார் 102 கி.மீ தொலைவில் உடையார்பாளையம் வட்டத்தில் செங்கமேடு உள்ளது,

வட்டம் : லால்குடி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 269/த.வ.ப.துறை/நாள்/20.12.94

Heritage Monuments Conservation Group

S.No Name and Designation Role Contact Us
1 Thiru A. Dhinesh Kumar Village Administrative Officer President +91 97874 84542
2 Thiru M. Sakthivel Curator, Department of Archaeology, Gangaikondacholapuram Secretary +91 98409 75213
3 Thiru M. Dhinesh Junior Engineer, Department of Archaeology, Thanjavur Deputy Secretary +91 98409 75213
4 Thiru K. Kaliyamoorthy Member +91 80126 68088
5 Thiru N. Rajendran Member +91 88838 17895
6 Thiru M. Kumaran Member +91 98655 31080
7 Thiru C. Selvaraj Member +91 73732 08596
8 Thiru A.Selvakumar Member +91 91504 26020