கல்வெட்டுகள் படியெடுத்தல்

கற்பாறைகள், தூண்கள், கோயிற் சுவர்கள், செப்பேடுகள், காசுகள், கற்கள், உலோகங்கள், பானைகள், மரங்கள், ஓலைச்சுவடிகள், துணிகள், சங்குகள் மற்றும் ஓவியங்கள்; மீதான எழுத்துப் பதிவுகள் பற்றிய ஆய்வு கல்வெட்டியல் எனப்படுகிறது. இப்பதிவு உள்ளத்தை வியக்க வைப்பதாகவும் தகவல் பொருந்தியதாகவும் விளங்குகிறது. இந்த எழுத்துக் கலையானது விலங்கிலிருந்து மனிதனை உயர்ந்தவனாக்கிய அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகவும் ஒருதலை முறையில் நிகழ்ந்த நிகழ்வுகளை வரலாறாக மாற்றவும்; , அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகவும் விளங்குகிறது.பண்டைய நாகரீகங்களின் வரலாறு, பண்பாடு முதலியவற்றை முழுமையாக வடிவமைத்து அறிந்து கொள்ள உதவும் முக்கியமான சான்றாகக் கல்வெட்டியல் விளங்குகின்றது. நீதி இயல், சமுதாயப் பண்பாட்டியல், இலக்கியம், தொல்லியல் ஆகியவற்றின் வரலாற்றுத் தொன்மையை நிலைநிறுத்த முதன்மை ஆவணச் சான்றாகக் கல்வெட்டியல் விளங்குகின்றது.

கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு, படிக்கப்பட்டு, தற்கால தமிழ் எழுத்தில் பதிப்பிக்கப்படுகின்றன.இதுவரை 24,771 கல்வெட்டுகள் தாள்களில் மைப்படிகளாக படியெடுக்கப்பட்டுள்ளன.