கும்பினியர் கல்லறைகள் - ஒட்டப்பிடாரம்

வரலாற்றுச் செய்திகள்

பாஞ்சாலங்குறிச்சி போரில் இறந்துபட்ட அதிகாரிகளின் கல்லறை ஒட்டப்பிடாரம் ஊரின் அருகில் அமைந்தள்ளது. இதனை இவ்வூர் மக்கள் கோரி என்று குறிப்பிடுகின்றனர்.

குல்லறையைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு உள்ளே செல்வதற்கு கிழக்குப்புறம் வாயில் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்புறம் 5 அதிகாரிகளை உள்ளடக்கிய கல்லறையை செவ்வக வடிவில் பெருமேடையாகக் காட்சி தருகிறது.

இம்மேடையின் மீது ஒவ்வொரு அதிகாரி புதைக்கப்பட்ட இடத்திற்கு மேலாக படி போன்ற வடிவமுடைய மேடு அமைத்துப் பிரித்து காட்டப்பட்டுள்ளது.

பாஞ்சாலங்குறிச்சி வீரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் பாஞ்சாலங்குறிச்சியில் பலமுறை போர் நடந்தது.

 

முதலில் ஆங்கிலேய வீரன் ஆலன் என்பான் கோட்டையைக் கைப்பற்ற முனைந்து தோல்வியுற்றான். நேல்லை மாவட்ட கலெக்டர் ஜாக்சன் என்பான் கட்டபொம்மனை சதி செய்து கைது செய்ய முயன்றான். ஆனால் வீரன் கட்டபொம்மன் வெற்றிவாகை சூடினான்.

குல்லறையில் காணப்படும் கல்வெட்டொன்று வீரபாண்டிய கட்டபொம்மனுடன் 1799-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 5-ஆம் நாள், காணல் பானா மேன் என்பான் தலைமையில் நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சி யுத்தத்தின் போது இறந்துவிட்ட கும்பினி படையினரின் லெப்டினென்டுகளான டக்னல், டார்மியக்ஸ், கொல்லின்ஸ், பிளேக், கன்னர்பின்ஸி ஆகிய ஐவரையும் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் இது என்று குறிப்பிடுகிறது.

அமைவிடம் : சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவிலும், மதுரையிலிருந்து 125 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது.

வட்டம் : ஒட்டப்பிடாரம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 189/த.வ.ப.துறை/நாள்/15.06.88