குற்றால அகழ்வைப்பகம் - திருநெல்வேலி

Get Direction / Information

வேலை நேரம்

: 10.00 a.m to 5.00 p.m.

விடுமுறை

: வெள்ளிக் கிழமை

அதிகாரி

: Thiru K.Sakthivel, Curator

தொலைபேசி

: ------------

 

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலாத் தலமாகக் குற்றாலம் திகழ்கின்றது. இங்குள்ள மிகப்பெரிய அருவி பல மருத்துல குணங்களை கொண்டுள்ளது. இப்பகுதி பண்டைய காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. பின்னர், சோழப்பேரரசு மற்றும் தென்காசிப் பாண்டியர்களின் ஆட்சியின் கீழும் இருந்துள்ளது.

இங்குள்ள சிவன்கோயில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டது. இங்குள்ள சித்திரச் சபையில் காணப்படும் ஓவியங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குற்றாலக் குறவஞ்சி என்ற நூல். இக்கோயில் இறைவன் குற்றாலநாதரைச் சிறப்பித்துப் பாடப்பட்டதாகும். இதில் இம்மலையில் வாழ்ந்த பழங்குடியினரின் வாழ்க்கை முறை, நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரின் வாழ்க்கை நிலையைச் சித்தரிக்கவும், வேட்டையாடி வாழும் அவர்களது வாழ்க்கை முறையை அறியவும் இவ்வகழ்வைப்பகம் கி.பி. 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

காட்சிப் பொருட்கள்:

நுண்கற்கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலக் கருப்பு, சிவப்பு வண்ணப் பானைகள், இரும்புப் பொருட்கள், சிற்பங்கள், சுடுமண் உருவங்கள் மற்றும் மரப்புதைப் படிவங்கள் ஆகியவையாகும்.