கோவலன் பொட்டல்

கோவலன் பொட்டல் என்ற இடம், மதுரை மாடக்குளத்தில் உள்ளடங்கிய சிறுக்கிராமமான பழங்காநத்தத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் தான், தமிழ்க் காவியமான சிலப்பதிகாரத்தின் நாயகனான கோவலன் கொல்லப்பட்டதால் இப்பகுதி கோவலன்பொட்டல் எனப்படுகிறது.

 

இப்பகுதியின் பழமையை அறியும் பொருட்டு 1980 ஆம் ஆண்டு இப்பகுதியில் அகழாய்வு நடத்தப்பட்டது. ஒரு குழியில் பெரிய முதுமக்கள் தாழிகள் மூன்று கண்டறியப்பட்டன. வாய் திறந்து காணப்பட்ட தாழியில், மனிதனின் கபாலம் (மண்டைப்பகுதி) எலும்புத் துண்டுகள் மற்றும் பானை ஓடுகள் இருப்பது கண்டறிப்பட்டது.

 

மேலும், சதுர செப்புக் காசு ஒன்று 45 செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. காசின் ஒரு புறம் மீன் உருவம் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.