கோவலன் பொட்டல்

வரலாற்றுச் செய்திகள்

பெருங்கற்காலச் சின்னங்களின் அமைவிடமான இவ்விடம் 1800 ஆண்டுகளுக்கு உட்பட்டது. 1980-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் தறை இவ்விடத்தில் அகழாய்வினை நடத்தியது. இரண்டு குழிகள் அகழப்பட்டன.

குழிகளில் எலும்பகளுடன் கூடிய தாழிகள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒரு தாழியில் கிடைத்த எலும்புகளையும் ஆய்வு செய்ததில் அவை நடுத்தர வயதுடைய ஆணின் எழும்புகள் என்றும், 1800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் அறியப்பட்டது.

இத்தாழிகள் தவிர, சங்க கால செப்புக் காசு, செப்பு வளையல், நுண்கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பாணையோடுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. அன்றிலிருந்து இன்றுவரை இவ்விடம் இடுகாடாகவே பயன் பட்டு வயதுள்ளது. சிலப்பதிகாரம் கூறும் கோவலன் இங்குதான் கொலையுண்டதாகச் செவிவழிச் செய்தி கூறுகிறது.

‘கோவலன் பொட்டல்’ என்ற பெயருக்கும் கூறப்படும் செவிவழிச் செய்திக்கும் ஏற்றாற்போல், இவ்விடமும் பெருங்கற்காலச் சின்னங்களோடு அன்றிலிரந்து இறந்தோரைப் புதைக்கும் இடமாகவே இருந்து வருவதால் அச்செய்தி உண்மையாக இருந்திருக்கக்கூடும் என ஊகிக்கலாம்.

அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருயது 3 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : மதுரை (தெற்கு)

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 29/கல்வித் துறை/நாள்/06.01.82