சமணர் படுக்கைகள் (ம) முருகன் கோயில் - வரிச்சியூர்

வரலாற்றுச் செய்திகள்

இவ்வூரின் மேற்கில் 1 கி.மீ தொலைவில் ஒரு சிறிய குன்று உள்ளது. இக்குன்றின் ஒரு பகுதியில் இயற்க்கையாக அமையத குகைத்தளம் ஒன்றில் சமணத்துறவியர் வாழ்ந்தமைக்கான கற்படுக்கைகள் உள்ளன. இக்குகையின் நெற்றியில் மூன்று பிராமிக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு பெரிதும் சிதைந்துள்ளன. மூன்றாவது கல்வெட்டு இக்குகையை இளநாதன் என்பவன் செய்வித்தான் என்ற செய்தியைத் தருகிறது. இவற்றின் காலம் கி.பி முதல் நூற்றாண்டாகும்.

அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருயது 12 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : மதுரை (வடக்கு)

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 1109/கல்வித் துறை/நாள்/017.06.78