சின்னையன்குளம் - சின்னையன்பேட்டை
வரலாற்றுச் செய்திகள்
நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கிபி 16-17ஆம் நூற்றாண்டில் சின்மை நாயக்கர் என்பவரால் தன் மகளின் நலனுக்காக ஒரு குளம் வெட்டப்பட்டது. அது இன்றளவும் சின்மை நாயக்கன் பேரால் சின்மை நாயக்கன் குளம் என்றே அழைக்கப்படுகிறது.
இக்குளம் ஏறத்தாழ 120 சதுர அடி பரப்பில் நாற்புறமும் படிக்கட்டுகளுடன் அமைக்கப்படடு மதில் சுவர்களுடன் காணப்படுகிறது. தமிழகத்தில் ஆண் பெண்ணின் அக வாழ்க்கையில் அகவுணர்வையும். பாலுணர்வையும் தூண்டும் சிற்பங்கள் நிறைந்த குளங்கள் இரண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமே உள்ளன. ஒன்று சின்னையன்குளமும். மற்றொன்று இராசந்தவாடியிலுள்ள அம்மா குளமும் ஆகும்.
குளத்தின் பல்வகைச் சிற்பங்கள் பாங்குடன் செதுக்கப்பட்டுள்ளன. பற்பபனவும். ஊர்வனவுமாய பல்வகை உயிர்களும். இரட்டைப்புள் (மிதுனம். பெண்டிர் விளையாட்டுக்கள் மற்போர் .
பன்றி வேட்டை போன்ற உயிரினங்களின் வாழ்வியற் காட்சிகளோடு அகவுணர்வைத் தூண்டும் பல்வேறு பாலுணர்வு காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன. இது போன்ற காட்சிகள் நாயக்கர் காலத்து தேர்ச் சிற்பங்களிலும் இடம் பெற்றுள்ளன. இவை சிற்பக்கலை வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்தது.
இச்சிற்பங்களைத் தன் மகளின் உணர்வுகளைத் தூண்ட சின்மை நாயக்கன் செதுக்குவித்தான் எனச் செவிவழிச் செய்தி வழங்கினும் செஞ்சி நாயக்கர் காலச் சிற்பக் கலைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு எனலாம். மேலும். இங்குள்ள சிற்பங்களில் காமச்சிற்பங்களே மிகுதி எனினும் இவைத்தவிர இதிகாசக்காட்சிகளும். புராணக் காட்சிகளும் தெய்வ உருவங்களும் இடம் பெற்றுள்ளன. இராமர் வாலியை மறைத்து அம்பு எய்தல். ஏழு மராமரங்களை வீழ்த்துதல். அசோகவனத்தில் சீதை. இராமர் சீதை இலக்ஷ்மணன். அனுமன் வாலி சுக்ரிவன். சடாயு - சம்பு ஆகியோரின் உருவங்களும். கிருஷ்ணலீலை. காமாட்சி. சுயீவலிங்கத்தைத் தழுவுதல். புயீட்சாடணர். திருமால் அவதார காட்சிகளும் இடம் பெற்றுள்ளன/ இங்கு சிலம்பாட்டம். மல்யுத்தம் . துப்பாக்ளூகி ஏந்தி புலியுடன் போரிடும் வீரர்கள் ஆகியவையும் காட்டப்பட்டுள்ளன.
அமைவிடம் : சென்னையிலிருந்து 188 கி.மீ தொலைவில் உள்ள திருவண்ணாமலையிலிருந்து அரூர் செல்லும் வழியில் 40 கி.மீ தொலைவில் உள்ளது.
வட்டம் : செங்கம்
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 158/த.வ.ப.துறை/நாள்/06.05.88