சின்ன ஐவர் மலை மற்றும் குகைக் கோயில் சிற்பங்கள்
வரலாற்றுச் செய்திகள்
அயிரமலை என்னும் இச்சிறு குன்று ஐவர்மலை என்றும் பெயர் பெறும். தாதநாயக்கன்பட்டி என்னும் தலைமைக் கிராமத்தினுள் அடங்கியது இவ்ஐவர்மலை. இம்மலையின் ஒரு பகுதியில் இயற்கையாக அமைந்த குகைத்தளம் உள்ளது. இங்கு நெடுங்காலமாகச் சமணத் துறவியர் வாழ்ந்துள்ளனர். மலையின் நெற்றியில் சமணத்தீர்த்தங்கரர் சிலரின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளன. ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அதனைச் செய்து வைத்தவர்களின் பெயர்கள் வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
அவர்களில் அச்சணந்தி, இந்திரசேனர், வீரசங்கத்தைச் சேர்ந்த மல்லிசேனர், அவ்வந்திக்குரத்தியார் என்னும் பெண் துறவியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இப்பள்ளியோடு பாண்டி நாட்டு பிற சமணப் பள்ளிகளுக்கும் தொடர்பு இருந்தது.
நாலூர் அவிசேரிப்பள்ளி என்னும் பள்ளியிலிருந்து சிலர் இப்பள்ளிக்கு வந்து சென்றனர் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கல்வெட்டுகள கி.பி 9-10 ஆம் நுற்றாண்டைச் சேர்யதவை.
அமைவிடம் : சென்னையிலிருயது சுமார் 504 கி.மீ தொலைவிலும், மதுரையிலிருந்து 139 கி.மீ தொலைவில் உள்ளது.
வட்டம் : பழனி
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள் : அ.ஆ.எண். 150/த.வ.ப.துறை/நாள்/17.05.89