சேத்தமங்கலம்

சேந்தமங்கலம் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டில் கிடவ மன்னர்களின் தலைநகரமாகத் திகழ்ந்திருந்தது. இங்கு மேற்கொண்ட கள ஆய்வில் பித்தளை முத்திரை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

 

இரண்டு மீன் உருவங்கள் மற்றும் செங்கோல் பொறிப்புடன் கூடிய இம்முத்திரை கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். முறையான அகழாய்வு மாளிகைவெளி மற்றும் குயவனோடைக்கருகில் உள்ள கோட்டைமேட்டுப் பகுதிகளில் நடத்தப்பட்டது.

 

சுடுமண் உருவங்கள் ரௌலட்டட் பானை ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பானை ஓடுகள் மற்றும் கி.பி. 1-2 நூற்றாண்டைச் சார்ந்த சட்ட கிணற்றுப் பகுதிகள் வெளிக் கொணரப்பட்டன.