டச்சு கல்லறை
வரலாற்றுச் செய்திகள்
இந்த கல்லறைகள் தர்போது உப்பு வாரியத்தின் சுவரில் உள்ளது. இதில் உள்ள கல்வெட்டுகள் டச்சு எழுத்தில் எழுதப்பட்டள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மிக பழமையான கல்லறையாகும். இது கி.பி 1667-ஆம் ஆண்டில் Cornelis clasen என்பவருக்கு எடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு கல்வெட்டு கி.பி 1680-ஆம் ஆண்டைச் சார்ந்த Isaac Van Hoom என்பவருக்கு எடுக்கப்பட்டுள்ளது. கி.பி 1680 ஆம் ஆண்டைச் சார்ந்த, மூன்றாவது கல்வெட்டு Elisabel Myntra என்பவருக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் டச்சு மொழியில் எழுதப்பட்டுள்ளது. இக்கல்லறை Vanden Serquart என்பவரின மகள் என்பது தெரிய வருகின்றது.
தஞ்சை மாவட்டத்தில் பல கல்லறைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கல்லறைகளில் இது மிகவும் பழமையானதாகும். எனவே, இது வரலாற்றுச் சின்னமாக பாதுகாத்து வரப்படுன்றது.
அமைவிடம் : சென்னையிலிருந்து 304 கி.மீ தொலைவில் உள்ள கி.மீ நாகப்பட்டிணத்தில் உள்ளது.
வட்டம் : நாகப்பட்டிணம்
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 1286/.கல்வித் துறை/நாள்/29.06.81