தமிழ் பிராமிக் கல்வெட்டு - ஆணைமலை

வரலாற்றுச் செய்திகள்

ஒரு யாணை கால்களை மடித்து  தன் துதிக்கையை நீட்டிப் படுத்திருப்பது போல் உள்ளது இம்மலையின் தோற்றம். எனவே இம்மலை யாணைமலை என அழக்கப்படுகிறது. இம்மலைக்கு அருகில் உள்ள ஒரு ஊர் நரசிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் முற்காலத்தில் நரசிங்கமங்கலம் எனப்பெயர் பெற்றிருந்தது.

ஆணைமலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. இம்மலையின் வடபகுதியின் மேல்பரப்பில் சமணத்துறவியர் வாழ்ந்த குகையும் கற்படுக்கைகளும் உள்ளன. மலையின் மேலே இயற்க்கையாக அமைந்த குகைத்தளம் ஒன்று உள்ளது. அங்கு சிலப் படுக்கைகள் மற்றும் தமிழ் பராமிக் கல்வெட்டும் உள்ளன.

இதனை பஞ்சபாண்டவர் படுக்கை என ஊரார் அழைப்பர். குகையின் நெற்றியில் காணப்படும் பிராமிக் கல்வெட்டில் யானைமலை என்பது பொறிக்கப்பட்டுள்ள வாசகம் ஆகும்.

  • இவ குன்றத்து உறையுள் பா தயதான் எரி அரிதன்
  • அத்துவாயி அரட்டகாயிபன்”

இவ என்பது யானையைக் குறிக்கும். இபம் என்னும் வடமொழிச் சொல் இங்கு இவ என்று குறிக்கப்ட்டுள்ளது. யானைமலை என்பது இவகுன்றம் எனக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. எரிஅரிதன் அத்துவாயி என்பவன் இங்கு சமண முனிவர்களுக்குப் படுக்கை வெட்டிக் கொடுத்தார் என்பதே இக்கல்வெட்டின் பொருளாகும். 

அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருயது வடகிழக்கே 8 கி.மீ தொலைவில் உள்ள அரமனனூர் என்னும் ஊரில் உள்ளது.

வட்டம் : மதுரை

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 23/த.வ.ப. துறை/நாள்/12.02.93