திருநாரிஸ்வரத்து மஹாதேவர் கோயில் - கண்டமங்கலம்

வரலாற்றுச் செய்திகள்

கண்டமங்கலம் எனும் இவ்வூர் சோழர் காலத்தில் ஸ்ரீ கண்டராதித்த மதுராந்தக மங்கலம் என்ற பெயரில் விளங்கியது. கண்டராதித்த மதுராந்தகன் என்ற செம்பியன் மாதேவியின் கணவனும், உத்தம சோழனின் தந்தையும், மேறகெழுந்தருளிய சிவஞானியுமான கண்டராதித்தன் பெயரில் இவ்வூர் விளங்கியதை கiவெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இவ்வூரில் சிவன் கோயில் ஒன்றும், விஷ்ணு கோயில்கள் இரண்டும் என ரூன்று கோயில்கள் இருந்துள்ளன. சிவன் கோயில் திருநாரிஸ்வரம் என வழங்கப்பட்டது. திருநாரிஸ்வரத்து மஹாதேவர் என இறைவன் வழங்கப்பட்டார். இரண்டு விஷ்ணு கோயில்களில் ஒன்று செய்தாங்கி விண்ணகர் என்றும் செயந்தாங்கி விண்ணகரப் பெருமான் என்றும் அழைக்கப்பட்டுள்ளார். திருவாய்பாடி ஆழ்வார் என்ற மற்றொரு விஷ்ணு .

கோயிலை முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. ஸ்ரீ பாதக்கிரம வித்தன் மகன் சீராளன் என்பவன் கோயிலில் விளக்கொஜக்க சபையிடம் ஆடுகளை அளித்ததை இராஜராஜன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. டீஇக்கோயில் மிகச் சிறியது கருவறை, அர்த்தமண்டபம் அட்டுமே கட்டப்பட்ட கோயிலாகும். கோயில் இடிந்த நிலையில் கூரையின்றி உள்ளது. சிறிய லிங்கமொன்றையும் முகலிங்கமாகக் காண்கிறோம். சதுரமான கருவறை, கருவறையின் தென்புற அதிஷ்ட்டானத்தில் கல்வெட்டுள்ளது. பராந்தகன் காலக் கோயிலாக இதனைக் கொள்ளலாம்.

அமைவிடம் : சென்னையிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் 22 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : விழுப்புரம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 320/த.வ.ப.துறை/நாள்/28.11.85