திருமலைநாயக்கர் (வசந்த) மண்டபம் - அழகர் கோயில்

வரலாற்றுச் செய்திகள்

அழகர்கோயிலில் உள்ள திருமால் கோயில் சங்க காலம் தொட்டே சிறப்புக்ககுறியது. இக்கோயிலின் கோட்டை மதிலின் உட்புறத்தில் திருமலைநாயக்கரால் கட்டப்பட்ட வசந்தமண்டபம் என்னும் கல்மண்டபம் ஒன்று உள்ளது.

இது கி.பி 17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இம்மண்டபத் தூண்களில் காணப்படும் திருமலைநாயக்கரின் உருவச் சிற்பம் நாயக்கர் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்றாகும். ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்பரங்குன்றம், திருபுவனம், மதுரைப் புதுமண்டபம் ஆகிய ஊர்களில் உள்ள திருமலைநாயக்கரின் உருவத்தைக் காட்டிலும் இங்குள்ள சிற்பம் எழில் வாய்ந்தது.

திருமலைநாயக்கரின் மனைவியரின் உருவமும் ஆடை, அணிகலன் வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன.

 

அமைவிடம் : சென்னையிலிருந்து 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருந்து 24 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : மேலூர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 219/த.வ.ப. துறை/நாள்/05.07.88