திருமலை நாயக்கர் அரண்மனை
வரலாற்றுச் செய்திகள்
இவ்வரண்மனை திருமலை நாயக்க மன்னரால் கி.பி.1636 இல் கட்டிமுடிக்கப்பட்டது. இது சொர்க்கவிலாசம், ரங்கவிலாசம் என்னும் இரண்டு பெரும் பகுதிகளைக் கொண்டிருந்தது.
சொரளூக்க வலாசத்தில் திருமலை நாயக்கரும், ரங்க வலாசத்தில் அவரது தம்பி முத்தியாலு நாயக்கரும் வாழ்ந்தனர். தர்பார் மண்டபம், நாடகசாலை, பள்ளியறை, படைக்கலன்களை வைக்ககும் அறை, அந்தபபுரம், இராஜராஜேஸ்வரி ஆலயம், பூங்கா, நிலா முற்றம் (சந்திரிகை மேடை), வசந்தவாவி, அமைச்சர்கள், அதிகாரி குடியிருப்புகள் எனப் பல பகுதிகளை உள்ளடக்கியிருந்தது இவ்வரண்மனை.
ஆரண்மனையின் நுழைவாயில் வடகிழக்கு முலையில் அமந்திருக்கிறது. 18 வகையான இசைக்கருவிகளை வாசித்து அவ்வாயிலின் வழியே அரசு விருந்தினரளூகள் வரவெற்கப்படுவர்.
இதன் அருகிலேயே பல்லக்கு மண்டபமும் இருந்தது. மிகப் பொலிவோடு திகுழ்ந்த இவ்வரண்மனை திருமலை மன்னரின் பெயரன் சொக்க நாதனால் சிதைக்கப்பட்டது. திருச்சிக்கு தலைநகரை மாற்றிய அவன் இவ்வரண்மனையின் அழகிய சிற்ப வேலைப்பாடுகளையெல்லாம், அங்கு எடுத்துக் சென்றான்.
ஆனால் அங்கும் அவன் புதிய அரண்மனையைக் கட்டவில்லை. எஞ்சிய அரண்மனைப் பகுதிகள் பின்னாளில் பெருமழை காரணமாகவும், மக்களின் ஆக்கிரமிப்பாலும் சுருங்கியது. தற்போது நான்கில் ஒரு பகுதியே எஞ்சியுள்ளது. இவ்வரண்மனையை சிறிதும் பெரிதுமாக 274 தூண்கள் அலங்கரிக்கின்றன. இவ்வரண்மனையை வடிவமைத்ததில் ஓர் இத்தாலியக் கட்டடக்கலைஞன் முக்கிய பங்கு வகித்தான் என்பர். இந்திய இசுலாமியக் கலைகளின் கூட்டுக் கலவையாக இவ்வரண்மனை காட்சியிளிக்கிறது.
இசுலாமியக் கலைக்கே உரிய வளைவுகள் (arches) இந்தியக் கட்டடக்கலைக்குரிய பூ மற்றும் சிற்ப வேலைப்பாடுகளும், ஐரோப்பியக் கலைப்பாணியிலான தூண் அமைப்புகளும் கொண்டு விளங்கும் ஓர் அரிய கலைச்சின்னமாக இவ்வரண்மனைத் திகழ்கிறது. நேப்பியர் பிரபு சென்னை மாநிலத்தின் ஆளுநராக இருந்த போது இவ்வரண்மனை பழுதுபார்க்கப்பட்டது. 1972 முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இதனை வரலாற்றுச் சின்னமாக எடுத்துப் பராமரித்து வருகிறது.
அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையில் உள்ளது.
வட்டம் : மதுரை
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 47/கல்வித் துறை/நாள்/06.12.72