திருரூலநாதர் கோயில் - பேரங்கியூர்
வரலாற்றுச் செய்திகள்
கல்வெட்டுகளில் பேரங்கூர் என்று குறிக்கப்பட்டுள்ள பேரங்கியூரில பராந்தகன் கால சிவன் கோயில் உள்ளது.ளூ திருமுனைப்பாடி நாட்டில் பேரங்கூர் பிரம்ம தேயமாக இருந்துள்ளது. கோயில் பெயர் ரூலஸ்தானமுடையார் கோயில் என்றும் இறைவன் ரூலஸ்தானமுடைய மஹாதேவர் என அழைக்கப்பட்டுள்ளார். புராந்தகன் தொடங்கி பல்வேறு அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன.
இராஜராஜன் காலத்தில் கோயில் பணிகளைக்யீ கவணிக்க ஸ்ரீருத்ர கணப்பெருமக்கள் நியமிக்கப்பட்டனர் என்று ஒரு கல்எவட்டு கூறுகிறது. கோயில் கருவறை, அர்த்தமண்டபம் இரண்டும் கோயில் கட்டப்பட்ட காலத்தவையாகும். முகமண்டபம் பிற்காலத்தது ஆகும்.
இக்கோயில் அதிஷ்டானம் முதல் கபோதகம் வரை கற்றளி, பிறகு விமானம் செங்கல்லும் சுதையும்ளூ கொண்டு கட்டப்பட்டுள்ளது.
கருவறையில் மேற்கு சுவரில் அதிஷ்டானப் பகுதியில் அளவு கோல் ஒன்று காணப்படுகிறது. இக்கோல் 365 செ.மீ நீளம் கொண்டுள்ளது. சோழர் காலத்தில் இந்த அளவுகோல் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். கோயிலில் வித்யாசமான எழில்மிகு சிற்பங்கள் உள்ளன. அர்த்த மண்டபத் தென்புற கோட்டத்தில் மானேந்திய விநாயகர் சிற்பம் உள்ளது. இவருக்கு பின்புறம் குடையும் இரு சாமரங்களும் உள்ளன. இவருடைய சதுர் புஜங்களில் மானும் அம்பும் ஏந்தியிருப்பது சிறப்பாகும். தென்புறக் கோட்டத்தில் உள்ள ஆலமர்ச் செல்வன் சிற்பம், வழக்கத்திற்கு மாறாக இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைத்தும், வலக்காலைத் தொங்க விட்டு அமர்ந்த நிலையில் உள்ளது.
மேலிருகரங்களில் அக்ஷமாலையும் உடுக்கையும் கீழ்க்கரங்களில் சுவடிகளை ஏந்தும் சின்முத்திரை தாங்கியும் உள்ளன. கோயிலின் தென் புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஷப்தமாதர், ரூதேவி, சண்டிகேஸ்வரர், விநாயகர்ச சிற்பங்கள் எழில் மிக்கவை. தமிழக அரசு தொல்லியல் துறை இக்கோயிலைப் பராமரித்து வருகிறது.
அமைவிடம் : சென்னையிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள வழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் உள்ளது.
வட்டம் : உளுந்தூர்பேட்டை
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 868/த.வ.ப.துறை/நாள்/20.12.94