தீர்த்தங்கலர் சிற்பங்கள் - ஆணைமலை

வரலாற்றுச் செய்திகள்

மதுரையைச் சுற்றி எண்பெருங்குன்றங்களில் சமணர் வாழ்ந்தனர். அதில் யாணைமலையும் ஒன்று. இங்கு சமணர்கள் வாழ்ந்தார்கள் என்பதை,

  • ஆணை மாமலை ஆதியாய இடங்களில் பல
  • அல்லல் சேர் ஈனர்களுக்கு எளியேன் அல்லன்

என்று சம்பந்தர் தன் மதுரைப்பதிப்பகத்தில் குறிப்பது கொண்டும் உணரலாம்.

இம்மலையின் வடமேற்குத் திசையில் ஒரு பகுதியில் சமணத்தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை அர்த்த பரியங்காசனத்தில் அமர்ந்து தியானக் கோலத்தில் வீற்றிருக்கின்றன. இவை கி.பி 9-10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த முந்தைய பாண்டியர் கால சமணச்சிற்பங்களுக்குச் சான்றாகத் திகழ்பவை.இவற்றின் கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. ஒன்றில் அச்சணந்தி செய்வித்த திருமேனி என்னும் குறிப்பு உள்ளது.

இச்சிற்பங்களை நரசிங்க மங்கலத்து சபையாரும், புரவுவரித்திணைக்களத்தாரும் பாதுகாத்தனர். இவ்வுருவங்களுக்கு மேல் சுதை சாந்து பூசி அதன்மேல் பலவண்ணங்களைக் கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சிவப்பு, பச்சை, மஞ்சள், கருப்பு ஆகிய வண்ணங்கள் தெளிவாகத் தெரிகின்றன. தீர்த்தங்கரரின் இருபுறமும் குத்து விளக்கு மற்றும் தாமரை மலர்களும் தீட்டப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் யாவும் புகழ்பெற்ற சித்தன்னவாசல் ஓவியங்களுக்கு சமகாலத்தவை.

அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருயது வடகிழக்கே 8 கி.மீ தொலைவில் உள்ள நரசிங்கம் என்னும் ஊரில் உள்ளது.

வட்டம் : மதுரை

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 23/த.வ.ப. துறை/நாள்/12.02.93