தொல்மந்தர் அகழ்வைப்பகம் – பூண்டி

Get Direction / Information

வேலை நேரம்

: 10.00 a.m to 5.00 p.m

விடுமுறை

: வெள்ளிக் கிழமை

அதிகாரி

:Thiru S.Sreekumar, Curator- I/C

தொலைபேசி

: ------------

 

கி.பி. 1863- ஆம் ஆண்டு சென்னையை அடுத்த பல்லாவரத்தில் சர்.இராபர்ட் புரூஸ்புட் என்ற ஆய்வாளர் கண்டுபிடித்த பழைய கற்கால கருவியே பூண்டி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பழைய கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்க முன்னோடியாகத் திகழ்ந்தது. இந்த அரிய கண்டுபிடிப்பு, தமிழகத்தினைப் பழைய கற்கால உலக வரைபடத்தில் இடம் பெற செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வாழ்ந்திருந்தான் என்பது அறியப்படுகின்றது.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியின் அருகில் உள்ள பூண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் உலக அளவில் தொல்லியல் மற்றும் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகத் திகழ்கின்றன. பழைய கற்கால மனிதன் வாழ்ந்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற இடத்தில் அமைந்த குகை, பண்டைய மனிதன் வாழ்ந்திருந்ததற்கான அடையாளங்களுடன் காணப்படுகின்றன. இப்பகுதி இயற்கை ஆர்வலர்களும், மலை ஏற முனைவோரும் சென்று, பார்த்து, ரசித்து இன்புற ஏற்ற இடமாகும்.

தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை தொல்பழங்காலத்தைச் சார்ந்த தொல்பொருட்களுக்காக இக்காட்சியகத்தினை பூண்டியில் 1985-ஆம் ஆண்டு தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டத்தில் திருவள்ளூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் பூண்டி அகழ்வைப்பகம் அமைந்துள்ளது.

காட்சிப் பொருட்கள்:

பழைய கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், ஈமத் தொட்டிகள் (சிறிய மற்றும் பெரிய அளவிலானவை) பெருங்கற்கால ஈமத்தாழிகள், கிண்ணங்கள், மரம் மற்றும் நத்தையின் புதைப்படிவங்கள், மூன்று கால்களை உடைய தாழிகள், இரும்பு மண்வெட்டி, கோடரி மற்றும் இரும்பு உருக்கப் பயன்படும் சுடுமண் குழாய்கள் ஆகியவையாகும்.