த்ரைலோக்யநாதர் - ஜீனசுவாமி கோயில் - திருப்பருத்திக்குன்றம்:
வரலாற்றுச் செய்திகள்
காஞ்சிபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் சிறப்புற்று விளங்கும் சமனத்தளம் ஜீனகாஞ்சி என அழைக்கப்படும் திருப்பருத்திக்குன்றமாகும். இத்தலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து சமன சமய முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.
பல்லவர்களது ஆட்சியின் போது தோற்றுவிக்கப்பட்ட மகாவீரர் கோயில் படிப்படியாக விரிவாக்கம் பெற்று வளர்ந்திருப்பதைக் காணலாம். இக்கோயில் சோழர் காலத்திலும், விஜயநகர மன்னர்களது ஆட்சியின் போதும் அதற்குப் பின்னரும் பல்வேறு தானங்களைப் பெற்றிருக்கிறது. பலர் இக்கோயிலுடன் தொடர்பு கொண்டு சமயம், கல்வி, சமுதாயப் பணிகள் ஆகியவற்றை செவ்வனே ஆற்றிவந்த பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. இது இந்தியாவில் உள்ள நான்கு “வித்தியாஸ்தானங்களுள்” ஒன்றாகக் கருதப்பட்டு வருகிறது.
அமைவிடம் : சென்னையிலிருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிபுரத்தில் உள்ளது
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 20/த.வ.ப.துறை/நாள்/30.01.90