நெற்களஞ்சியம் - திருப்பாலத்துறை

வரலாற்றுச் செய்திகள்

இவ்வூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பாலைவணநாதர் (சிவன்) கோயிலில் வீரராசேத்திரன், முன்றாம் இராசராசனின் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. நாயக்கர் மற்றும் மராட்டியர் காலத்தில் மண்டபங்கள், திருச்சுற்று போன்றன கட்டப்பட்டுள்ளன. கி.பி. 7ஆம் நுற்றாண்டிலிருந்தே இச்சிவன்கோயில் சிறப்புற்று இருந்துள்ளது என்பது தெரிய வருகின்றது.

கோயில் திருச்சுற்றின் உட்பகுதியில் நெற்களஞ்சியம் ஒன்று காணப்படுகின்றது. இந்த தெற்களஞ்சியம் வட்ட வடிவிலும், மேல்பகுதி கூம்பு வடியிலும் கட்டப்பட்டள்ளது. முழுவதும் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த களஞ்சியத்தின் சுவரில் உள்ள செங்கற்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சுண்ணாம்பு சாந்து குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இக் களஞ்சியத்தின் உயரம 36 அடியும், சுற்றளவும் 80 அடியும் கொண்டுள்ளன. இது சுமார் 3000 கலம் நெல்லை சேமித்து வைக்க ஏதுவாக கட்டப்பட்டுள்ளது.

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னன் அச்சதப்ப நாயக்கர் அவரது மகன் ரகுநாத நாயக்கர் கி.பி. 1600 - 1634 வரை ஆட்சி செய்த காலத்தில் இவர்களின் ஆசிரியர் கோவிந்தப்ப தீட்சிதரால் இக் கட்டம் கட்டப்பட்டதாக தெரிய வருகின்றது

இக்களஞ்சியத்திற்கு முன்று வாயில்கள் உள்ளன. ஒன்றையடுத்து ஒன்று என்ற முறையில் கீழ்ப்பகுதியில் ஒன்றும், மையப்பகுதியில் ஒன்றும், மேல்பகுதியில் ஒன்றும் ஆக மூன்று வாயில்கள் உள்ளன. கீழ் பகுதியில் நெல் நிறைந்தவுடன் இப்பகுதியை அடைத்துவிட்டு, மையப்பகுதியிலுள்ள வாயிலில் நெல்லைக் கொட்டுவார்கள். பின் மையப்பகுதி நிறையதவுடன் மேல் பகுதி வாயிலில் கொட்டுவார்கள்.

இத்தகைய அமைப்பு இங்கு மட்டும் தான் காணப்படுகின்றது. மேலும், இந்த அமைப்பு முறை நீர்த்தேக்கங்களில் உள்ள குமிழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் போன்றதாகும்.

செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இயத களஞ்சியத்தின் உட்பகுதி கூம்பு போன்ற அமைப்பில் காணப்படுகினறன. இந்த கூம்பு அமைப்பு பெரிய கோயிலில் உள்ள விமானத்தின் உப்பகுதியில் உள்ள கட்டக்கலை அமைப்பை ஒத்து காணப்படுகிறது. இதைப் போன்று நெற்களஞ்சியம் ஸ்ரீரங்கத்திலுள்ள கோயிலிலும் கட்டப்பட்டுள்ளது.

அமைவிடம் : சென்னையிலிருயது 342 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சாவூரில் இருந்து தஞ்சை - கும்பகோணம் சாலையில் உள்ளது.

வட்டம் : பாபநாசம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 89/த.வ.ப. துறை/நாள்/31.05.90