பட்டறைப் பெரும்புதுhர்

  கொசஸ்தலையாற்றின் (கொற்றலை) கரையில் அமைந்துள்ள பட்டறைப் பெரும்புதுhர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த ஒரு சிற்றுhராகும். குடியம், அத்திரம்பாக்கம், வடமதுரை, நெய்வேலி, பரிக்குளம் உள்ளிட்ட கற்கால இடங்கள் இவ்வூருக்கு அருகே அமைந்துள்ளது. தொல்லியல் தடயங்களானது இவ்வூரில் உள்ள ஆனைமேடு, நத்தமேடு மற்றும் இருளந்தோப்பு ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டது.

 

இத்தொல்லியல் முக்கியத்துவத்தின் அடிப்படையில் 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. அகழாய்வின் முடிவில் இந்த இடமானது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் வெளிக்கொணரப்பட்டன

 


அகழாய்வில் கற்கால கருவிகள், பலவித மட்பாண்டங்கள், செங்கற்கள், இரும்புப் பொருட்கள், கூரை ஓடுகள், சூது பவள மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண் பொருட்கள், கண்ணாடி மணிகள், செம்பு பொருட்கள், தமிழ் பிராமி எழுத்து பொறிப்பு பெற்ற மட்பாண்டங்கள், பல்வேறு குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வண்ணம் தீட்டப்பட்ட ஓடுகள், யானை தந்தத்திலான ஆபரணப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுடுமண்ணாலான உறைகிணறு என பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் பெற்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவ்வகழாய்வானது பட்டறைப் பெரும்புதுhரில் இருந்த கற்காலம், இரும்புக்காலம் மற்றும் வரலாற்றுத் தொடக்ககாலம் என பண்டைய வரலாற்றினை எடுத்துரைக்கிறது.