பத்துத் தூண்கள்

வரலாற்றுச் செய்திகள்

மதுரையில் திருமலை நாயக்கர் அரண்மனையையொட்டி வடபுறம் அமையதுள்ள நவபத்கானா தெரு, மகால் வடம் போக்கித் தெரு, ஆகிய இரு தெருக்களின் இடையே பத்து தூண் சந்து என்று ஒரு குறுகிய தெரு உள்ளது. சுற்றிலும் வீடுகள் அமையதிருக்க நடுவே பத்துத்தூண்கள் மட்டும் வரிசையாக நிற்கின்றன.

பார்வையாளர்களை வியப்படையச் செய்பவை இத்தூண்கள். இன்று நாயக்கர் அரண்மனையின் திறந்தவெளி முற்றத்தில் உள்ளவை போன்ற உயரமான தூண்களாகும். இவை, வட்டமான கருங்கற்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி இத்தூண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கற்களின் மீது சுதையும், செங்கல்லும், கொண்டு பூசி அரண்மனைத் தூண்கள் போன்று வழவழப்பாக்கப்பட்டுள்ளன.

திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் வாழ்ந்த ரங்க விலாசம் என்ற அரண்மனையின் ஒரு பகுதியாக இத்தூண்களை கருதலாம்.

அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையில் உள்ளது.

வட்டம் : மதுரை

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 12943/கல்வித் துறை/நாள்/20.07.73