பாறை ஓவியங்கள் - செத்தவரை
வரலாற்றுச் செய்திகள்
ஊருக்கு மேற்கே அய்யனார் மலையில் காணப்படும் இயற்கைக் குகைத்தளங்களில் வரலாற்றுக்கு முந்தைய கால பாறை ஓவியங்கள் உள்ளன. இங்குக் காட்டப்பட்டுள்ள பெரிய மான் வடிவம் சிறப்பாக உள்ளது. கேடயம், வேல் உருவங்கள் இங்கு இருப்பதால் விலங்குகளை வேட்டையாடியவாகளாக இவர்களை கருதலாம். ஐக ஓவியம் ஒன்றும் இங்கே காட்டப்பட்டுள்ளது.
இங்குள்ள பெரிய வடிவில் உள்ள மாடும் எதிரில் தீயும் காட்டப்பட்டுள்ளது. வேட்டையாடித் தீயில் விலங்கினை வதக்கி இம்மக்கள் உண்டனர் எனலாம். வுயீலங்குகளின் இறைச்சியை உரு கோலில் கோர்த்து தீயில் சுடும் வழக்கம் சங்ககாலத்திலும் தொடர்ந்து இருந்ததாகத் தெரிய வருகிறது.
தீமிதி சடங்கினை இந்த ஓவியம் குறிப்பதாகவும் கருதலாம். முனித உருவம் இங்கிருப்பினும் .
கீழ்வாலையை விட குறைவாகும். ஏறக்குறைய 17 உருவஙகள் இங்குள்ளன. குறிப்பாக மான், மாடு, ஆடு, கை, வாள், கழுதை, யாணையின் தும்பிக்கை, காட்டெருமை, பன்றி, ஒட்டகம் ஆகியவை காண்கிறோம்.
எருமையின் எழும்புகள் கோடுகளால் காட்டப்பட்டுள்ளன எக்ஸ்ரே வடிவமைப்பு என்று இவ்வரைபடத்தைக் குறிப்பிடுவர். சுயீவப்பு மற்றும் வெளளூளை இரு நிறங்களையும் இங்கு காண்கிறோம்.
இங்குள்ள பசுவின் ஓவியம், பிம்பெட்கா ஓவியத்தில் உள்ள பசு போன்று உள்ளது. பசுவின் முகம், கழுத்துப் பகுதிகள் சிவப்பு வண்ணத்தில் உள்ளது. இதன் பின் பகுதியில் சிவப்பு வண்ணக் கோடுகள் உள்ளன. நான்கு மீன் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. உடல் பகுதிகள் யாவும் வெளளூளை நிறத்திலும், வெளிப்பகுதி சிவப்பு வரைக்கோட்டு முறையிலும் அமைந்துள்ளன. மீன் பிடிக்கத் தெரிந்தவர்களாக இங்கிருந்த கற்கால மக்கள் விளங்கினர். மீன் தெய்வமாகவோ, குறியீடாகவோ இருக்கலாம். வுளமைச் சடங்காகவும் இருக்கலாம்.
சேத்தவரையில் உள்ள ஓவியங்களுக்கு இடையே ஒரு மனித உருவமும் காணப்படுகிறது. இம்மனிதனின் ரூக்கு, கீழ்வாலை ஓவியத்தில் உள்ளது போன்றே உள்ளது. இம்மனிதனின் இடுப்பில் குறுவாள் ஏதும் காணப்படவில்லை. ஆதலால் இவ்வோவியங்கள் கிழ்வாலை ஓவியங்களை விடச் சற்று பழமை வாய்ந்ததாகதட தெரிகிறது. அதாவது கி.மு. 100க்கு முற்பட்டதாக இருகச்கலாம். இவ்வூர் பெயரே சிறப்பாகப் பழமையைச் சுட்டுகிறது.
அமைவிடம் : சென்னையிலிருந்து 140 கி.மீ தொலைவில் உள்ள செஞ்சியில் இருந்து நல்லான் பிள்ளை பெற்றாள் வழியாக வேட்டவலம் செல்லும் சாலையில் உள்ளது. கீழ்வாலையில் இருந்து 8 கி.மீ தொலைவிலும் செத்தவரை உள்ளது.
வட்டம் : செஞ்சி
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 81/த.வ.ப.துறை/நாள்/23.03.87