பேரூர்

பண்டைக் காலத்தில் காஞ்சிப் பேரூர் என்று அழைக்கப்பட்ட இவ்வூர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு முக்கிய மையப் பகுதியில் அமைந்துள்ளது. சாந்தலிங்க இராமசாமி அடிகளார் கல்லூரி வளாகத்திலுள்ள கள்ளிமேடு பகுதியிலும், திருநீற்றுமேடு பகுதியிலும் 2002 ஆம் ஆண்டு அகழாய்வு நடத்தப்பட்டது.

 

முக்கிய தொல்பொருட்களாக, சுடுமண் முத்திரை ஒன்றில் வில், அம்பும் அவற்றின் இருபுறமும் விளக்குகளும், மேற் பகுதியில் பிறை நிலவின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது சேர மன்னனின் அரச முத்திரையாகும். மேலும், உத்திரபிரதேசம், மதுராவில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் உருவத்தை ஒத்த சுடுமண் உருவத்தின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

இதன் காலம் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டு ஆகும். அகழாய்வில் சங்கு வளையல் துண்டுகளும், வண்ண மணிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.