மனோரா
வரலாற்றுச் செய்திகள்
மனோரா என்ற நினைவுச்சின்னம் தஞ்சை மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜியால் எழுப்பிக்கப்பட்டதாகும். ஆங்கிலேயருக்கும், நெப்போலியனுக்கும் இடையே பிரான்சு நாட்டின் வடக்கிலுள்ள வாட்டர்லூ என்ற இடத்தில் கி.பி. 1814ல் பெரும்போர் நடைபெற்றது. இப்போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி கொண்டனர்.
வரலாற்றையே மாற்றியமைத்த இந்த வெற்றியை ஆங்கிலேயர் மட்டுமின்றி அவர்களுடன் நட்பு கெண்ட நாடுகள் அனைத்தும் இந்த வெற்றியைக் கொண்டாடின. தமிழ்நாட்டில் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜியும் இதைக்கேட்டு மகிழ்ச்சியடையது அதன் நினைவாக நினைவுக் சின்னம் ஒன்றை எடுத்தார் அந்த நினைவு சின்னம் தான் ‘மனோரா’. இது கி.பி. 1814ல் கட்டப்பட்டது.
மனோரா என்பது ‘மினார்’ என்ற சொல்லிலிருந்து வந்தது. ‘மின்னார் என்பது ரோம் நாட்டிலுள்ள டிராசனை போன்றது என்று கட்டக்கலை வல்லுநர் பெர்கூசன் கூறுகின்றார். தூணைப் போன்ற உயரமான கட்டட அமைப்பைக் கொண்ட இத்தகைய சின்னம் மினார் அரச மரபைச் சார்ந்த கும்பா என்று மன்னனால் இரண்டு மினார்கள் (கி.பி.1425 - 64) தன்னுடைய வெற்றியின் நினைவாகக் கட்டினார்.
இது ஜெயஸ்தம்பம் (வெற்றித்தூண்) என்று அழைக்கப்படுகின்றது. இதைப் போன்று தான் மனோராவும். 75 அடி (22.30 மீ) உயரமுடைய இக் கட்டடம் எட்டு அடுக்குகளைக் கொண்டதாகும். அறுகோண அமைப்பிலும் கட்டப்பட்டுள்ளது. இதைச் சுற்றி பெரிய அகழி ஒன்றும், அதையடுத்து மதில்சுவரும், காணப்படுகின்றது. ஒரு கோட்டையின் அமைப்பில் காணப்படும் மனோரா, கலங்கரை விளக்கமாகவும் இருந்துள்ளது.
இரண்டாம் சரபோஜி, தன் குடும்பத்துடன் இங்கு வந்த தங்கியும் சென்றுள்ளார் என்பதை அவருடைய மோடி குறிப்புகள் கூறுகின்றன. இந்த நினைவுச்சின்னம் எதற்காக எடுக்கப்பட்டது என்பதைக் கூறும் கல்வெட்டு தமிழ், தெலுக்கு, மராட்டி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெட்டப்பட்டு அங்கு இடம் பெற்றுள்ளன.
சரபோஜி பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்ததால் நான்கு. மொழிகளில் இக்கல்வெட்டை வெட்டி வைத்துள்ளார். கல்வெட்டின் தமிழ் வாசகம் வருமாறு “இங்கிலீஷ் சாதியார் தங்கள் ஆயுதங்களினாலடைந்த ஜெய சந்தோஷங்களையும் போனபாற்தெயின் தாழ்த்தப்படுதலையும் நினைவுட கூறத்தக்கதாக இங்கிலீஷ் துரைத்தனத்தின் சினேகிதரும் படைத்துணைவருமாகிய தஞ்சாகீர் சீர்மை சத்திரபதி சர்போஜி மகாராசா அவர்கள் இந்த உப்பரிகைகயைக் கட்டி வைத்தார். காலம் - 1736.
அமைவிடம் : தஞ்சையிலிந்து 60 கி.மீ தொலைவில் உள்ள பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் உள்ளது.
வட்டம் : பட்டுக்கோட்டை
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 23/த.வ.ப. துறை/நாள்/12.02.93