மாளிகைமேடு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் அமைந்துள்ள மாளிகைமேடு என்ற ஊரில் 1999-2000 ஆண்டு அகழாய்வு நடத்தப்பட்டது. அகழாய்வின் மூலம் மூன்று காலகட்டப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் முகமாகத் தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

 

கருப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், சிவப்புப் பானை ஓடுகள், ரௌலட்டட் பானை ஓடுகள், எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் உஜ்ஜயின் குறியீடு கொண்ட செப்புக் காசு ஆகியவை அகழாய்வுக் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. கி.மு. 300 முதல் கி.பி. 1300 வரை இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தனர் என்பது தொல்லியல் சான்றுகளால் அறியப்படுகின்றது.