முக்தியாலீஸ்வரர் கோயில் (ம) சீதா குகை - பெருமுக்கல்

வரலாற்றுச் செய்திகள்

இவ்வூரைச் சுற்றி ரூன்று பெரிய குன்றுகள் இருப்பதால் பெருமுக்கல் ( ரூன்று பெரிய கற்கள் ) என்ற பெயர் ஏற்பட்டது போலும். நூற்றினையில் 272 ஆம் பாடலைப் பாடிய ஆசான் நல்வெளளூளையார் முக்கல் என்ற ஊரைச் சார்ந்தவராவார். பெருமுக்கல் ஊரின் மலை மேல் திருவான்மிகை ஈஸ்வரமுடையார் என்ற பெருமுக்கல் உடையார் முக்யாசலேசுவரர் எனவும் வடமொழியாக்கி அழைத்துள்ளனர். இராஜகோபுரமும், திருச்சுற்றும், மண்டபங்களும், கருவரையும் கொண்ட இக்கோயில் தொன்மை வாய்ந்ததாகும்.

முதல் குலோதுங்கன் காலம் வரை செங்கல் கோயிலாக இருந்த சிவன் கோயில், விக்கிரம சோழன் காலத்தில் கற்றளியாக்கப்பட்டது.

கோனூருடையான் அரையன் காக்குநாயகனான கனகராயன் என்பவன் கற்றளியாக்கியதுடன் திருமடைவிளாகமும் திருநந்த வனங்களும் செய்துள்ளான்.

இவனுக்கு உதவியாகப் பெய்த்தலைப் பெருமங்கலமுடையான் பெரியான் திருவன் ஆன சிறுத்தொன்டன் இருந்துள்ளான். கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், திருச்சுற்றுடன் கோயில் இருப்பினும் பெரும்பகுதி சிதிலமடைந்துள்ளது. அதிஷ்டானம் முதல் பிரஸ்தரம் வரையே கருவறை உள்ளது. ஆங்கிலேயர் போரினால் திருச்சுற்று சிதைந்து விட்டதுடன் முன் மண்டபமும் இடித்த நிலையில் உள்ளது.

அர்த்தமண்டப கோட்டபிள்ளையாரை விசையாலய விடங்கர் தோற்றுவித்ததை மகரதோரணத்திற்கு கீழ் உள்ள கல்வெட்டு கூறுகிறது. தற்போது வினாயகர் சிலை இல்லை. வுயீசையாலயனான காக்குநாயகன் பிள்ளையாரை எழுந்தருளிவித்ததுடன் அமுதுபடிக்கு நிலமும் அளித்துள்ளான். துடசிணாரூர்த்தி கோஷ்டத்திலும் சிலை இல்லை. எனினும் இரண்டு அடியவர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. ஒன்றில் பெருமங்கலமுடையான் திருவன் ஆன தொன்டன் என்ற பெயரும் கோயில் சைவாசிரியன் ஆத்ரயன் திருச்சிற்றம்பலமுடையான் அன்பர்கரசுபட்டன் என்ற பெயரும் உள்ளன. இவ்விருவரின் உருவங்களுடன் ரூன்றாவதாக பெயரின்றி உள்ள உருவம் கோயிலைக் கற்றளியாக்கிய காக்குநாயகனாக இருக்கலாம்.

பாறைகளிளும் 60 க்கு மேற்பட்ட கல்வெட்கள் உள்ளன. சோழமன்னர்கள், விக்கிரமபாண்டியன், கோப்பெருந்தச்சன், சம்புவரையர், விசயநகர வேந்தர்ஆகியோர் கோயில்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளனர். இவ்வூர் கல்வெட்டுகள் பல சுவையான செய்திகள் தருகின்றன. கோயில் நிலங்கள் ஏலம் கூறி விற்கப்பட்டன. 12 அடி கோலால் நிலங்கள் அளக்கப்பட்டன. கோலயிலுக்கென தேவரடியார்கள் நியமிக்கப்பட்டனர். கோதையாழ்வியான பிரவு வரிநங்கை என்று தேவரடியார் திருக்காமக் கோட்டத்தில் விநாயகரை எழுந்தருளிவித்துள்ளான். அனுமார் கோயிலில் உள்ள பலகைக்கல்லில், உத்தம சோழன் காலத்தில் அம்பலவன் கண்டராதித்தன் என்பவன் ஒரு கோயில் கட்டிய விபரம் உள்ளது.

இராஜராஜ சம்புவராயனுக்குத் தொற்றிய வியாதி குணமாவதற்காகப் பணிப்பெண் ஒருத்தி உயிர் விட்டுள்ளாள். இதற்காக நிலக்கொடை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தருமம் குறையக் கூடாது என்ற எண்ணத்தில் அறமிறங்கா நாட்டுச் சந்தி ஒன்று இக்கோயிலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீதாகுகை: மலையில் மேற்புற சரிவில் இயற்கையான குகை போன்றதோர் பகுதி உள்ளது. இதனை ஊரார் சீதாப்பிராட்டி குகை என்று அழைப்பர். இங்கு பாறையில் கீறல் பொறிப்புடன் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளது. கீறல் வளைவுகளை எகிப்தில் உள்ள ஹீரோகிளிப்சிர்க்கு சமகாலத்தது என்று சிலரும், பெருங்கற்காலத்தது என்று சிலரும் கூறுவர். எனினும் இவற்றை வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்ததாகவே குறிப்பிட வேண்டும். கீறல் உருவங்கள் தெளிவாகக் காண இயலாவிடினும்’ சில மனித உருவங்களும், விலங்குகளும், வட்டங்களும், பெருக்கல் குறியீடும் தெறிகின்றன. வட்டெழுத்தில் கூடிய கல்வெட்டு பெருந்சரன் எழுதப்பட்டுள்ளது. இது கி.பி 6-7 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி எனலாம்.

அமைவிடம் : சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து மரக்காணம்ளூ செல்லும் சாலையில் 11 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : திண்டிவனம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 863/த.வ.ப.துறை/நாள்/08.11.01