முற்காலப் பாண்டியர் கல்வெட்டு - வேடச்சந்தூர்

வரலாற்றுச் செய்திகள்

இவ்வூரின் புறத்தே உள்ள ஒரு பாறையில் அழகிய தமிழ்க் கவிதை வடிவில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

மாறஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னனுடன் இடவை போரில் கலந்து கொண்ட பராந்தகப்பள்ளிவேல் என்னும் நக்ன்புள்ளான், என்பவன் தன பெயரில் புள்ளனேரி என்று ஓர் ஏரி வெட்டுவித்து கரைகளில் கல் பதித்து குமிழி ஒன்று கட்டினான்.

ஆனால் அப்பணி முற்றுப்பெறும் முன்னர் அவன் மரணமடைந்தான். அதை செய்த கல் தச்சனும் இறந்தான். தச்சனுடைய மகன் பணியை நிறைவு செய்தான்.புள்ளன் மகன் நக்கன் அவனுக்கு தலைநீர் பாய்ந்து விளைகின்ற பூமியைக் கொடையாகக் கொடுத்தான் என்று இக்கல்வெட்டு கூறுகின்றது.

 

தமிழ் பாடல் கல்வெட்டின் இலக்கியச் சுவையை இக்கல்வெட்டின் மூலம் அறியலாம்.

அமைவிடம் : சென்னையிலிருந்து  428 கி.மீ தொலைவிலும்  மதுரையிலிருந்து  85 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : வேடச்சந்தூர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 124/த.வ.ப.துறை/நாள்/26.04.89