லாடன் கோயில் – ஆணைமலை

வரலாற்றுச் செய்திகள்

மலையின் வடக்கு சரிவில் பாண்டிய மன்னன் ஜடில பராந்தக நெடுஞ்சடைநன் காலத்தில் (க.பி 768) குடைவிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ள நரசிம்மப் பெருமாள் கோயிலை அடுத்து லாடன் கோயில் அமையதுள்ளது. இங்குள்ள முனிவர் சிற்பம் ஒன்றுக்கு லாட முனிவர் என்று பெயர் கோடுத்து இக்கோயிலை லாடன் கோயில் என்று இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்குடைவரைக் கோயில் முற்கால பாண்டியர் காலத்தியது. இது முருகப்பெருமானுக்காக குடைவிக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இது சதுரமான சிறிய கருவறையும் நீள் சதுர முகமண்டபத்தையும் உடையது. முகமண்டபத்தை இரு தூண்கள் அலங்கரிக்கின்றன. கருவரையில் இருகரங்களை உடையவராய் முருகப்பெருமான் அமர்யதிருக்க அவர் அமர்ந்துள்ள நீண்ட இருக்கையிலேயே அவரது இடது புறம் தெய்வானை அமர்ந்து விளங்குகிறார்.

கருவறையின் வாயிலின் இருபுறம் சேவலும் மயிலும் கொடிக்கம்பங்களின் மீது செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.குண்டை நாளில் முருகப்பிரானுக்கு சேவற்கொடியும் மயில்கொடியும் இருந்ததை இவை உறுதிப் படுத்துகின்றன. கருவறை வாயிலின் இருபுறமும் ஆடையுடனும் கௌபீனத்துடனும் இரு முனிவர்கள் கைகளில் மலர் கொத்துகளுடன் விளங்குகின்றனர்.

முகமண்டபத்தின் ஒருபுறம் சிதைந்த ஒரு விலங்கின் உருவமும், மறுபுறம் மன்னனை ஒத்த உருவம் கையை உயர்த்தி மண்டியிட்டு வணங்கும் நிலையில் சிற்பங்களாக உள்ளன.

இவ்விடத்தில் ஒரு பாறைச் சுவரில் வட்டக்குறிச்சியைச் சேர்ந்த நம்பி பட்ட சோமாஜி பரிவிராஜகர் என்பவர் புதுப்பித்தார் என்ற செய்தியை சொல்லும் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இதன் காலம் கி.பி எட்டாம் நூற்றாண்டாகும்.

அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருயது வடகிழக்கே 8கி.மீ தொலைவில் உள்ள அரமனனூர் என்னும் ஊரில் உள்ளது.

வட்டம் : மதுரை

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 23/த.வ.ப. துறை/நாள்/12.02.93