வாலீஸ்வரர் கோயில் - தக்கோலம்

வரலாற்றுச் செய்திகள்

தக்ளூகோலத்தில் உள்ள ஜலநாதீசுவரர் கோயில் பாடல் பெற்ற கோயில் ஆகும். தக்கன் என்ற அசுரன் ஓலமிட்டுச் சிவனை வழிபட்டதால் தக்கன் ஓலம் தக்கோலம் ஆயிற்று என்பர். தக்கனை அழித்த வீரபத்திரர் கோயில் ஊருக்கு மேற்கில் உள்ளது. இறைவன் நீருற்று வடிவமாக இருக்கிறான் என்பதற்பேற்ப ஜலநாதீஸ்வரர் என்றும் இவ்வூர் திருகீறல் என்றும் வழங்கப்பட்டுள்ளது.

தக்கோலத்தில் ஓர் இயற்கை நீர்ஊற்று பால் போல் வெண்ணிறம் கொண்டிருந்தமையால் திருப்பாலுறல் என வழங்கப்பட்டது என்றும் கூறுவர்.

இராட்டிரக்கூட மன்னன் ரூன்றாம் கிருஷ்ணன் கன்னர தேவன் தக்கோலப் போரில் இராசாதித்தனைக் கொன்ற வரலாறு பலருமறிந்ததாகும்/ முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் கிபி 1018 - 1054 இவ்கீர் இரட்டபாடி கொண்ட சோழபுரம் என்றும் முதல் குலோத்துங்கன் காலத்தில் பல்லவபுரம் எனவும் குலோத்துங்க சோழபுரம் எனவும் விஜயநகர அரசர் காலத்தில் படிமுடி கொண்ட சோழபுரம்

எனவும் வழங்கப்பட்டது. தக்கோலம் ஊருக்குக் கிழக்கில் திருவாலீஸ்வரம் என்ற சிதைந்த கோயில் உள்ளது. அளூதிஷ்டானத்திலிருந்து கொடுங்கை வரை கருங்கல்லாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டது. விமானம் வட்ட வடிவில் அமைந்துள்ளது.. இதன் கோஷ்டங்களில் சிற்பங்கள் இல்லை.

அர்த்த மண்டபத்திற்கு வெளியில் 4 கருங்கல் தூண்கள் கொண்ட திறந்தவெளி மண்டபம் உள்ளது. முதலாம் இராஜேந்திரனுடைய 8ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டே வாலீஸ்வரர் கோயிலின் தொன்மையான கல்வெட்டு என்பதால் கிபி 1020க்கு முன் இக்கோயில் கட்டப்பட்டது உறுதியாகிறது/ முதல் இராசேந்திரனின் தாய் திரிபுவன மாதேவியின் நலம் பொருட்டு நாற்பத்தெண்ணாயிர பிடாரர் கோயிலில் இறைவனுக்கு விஷாகா பாலபிஷேகத்திற்காக 32 பசுக்களை வழங்கியுள்ளார். இறைவன் மகாதேவனாய மும்மலை ஈஸ்வரன் எனவும் ஊர் திருப்பாமுதல் எனவும் வழங்கப்பட்டுள்ளது.

கருவறை மேற்குச் சுவரில் விக்கிரசோழனின் கல்வெட்டு (கிபி 1123) உள்ளது. கருவறை வடக்கில் உள்ள கல்வெட்டு முன்றாம் இராசேளூநதிரன் காலத்தது ஆகும்/ உமேசுர தேவன் விநாயகர் போன்றோருக்கு செப்புப் படிமங்கள் எடுத்து வழிபாட்டுக்கு மன்னன் கொடை வழங்கிய விவரம் கல்வெட்டில் உள்ளது. ஊர் குலோத்துங்க சோழபுரம் என்றும் இக்கல்வெட்டில் கூறப்படுகிறது.

அமைவிடம் : சென்னை - அரக்கோணம் சாலையில் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள தக்கோலம் கிராமத்தில் அமைந்துள்ளது.

வட்டம் : அரக்கோணம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 34/த.வ.ப.துறை/நாள்/03.02.86