விஷ்ணு கோயில் - உலகாபுரம்
வரலாற்றுச் செய்திகள்
பெருமாள் கோயில் இவ்வூரின் மேற்குப் பகுதியில் உள்ளது. இக்கோயிலில் உள்ள முதலாம் இராஜேயதிர சோழன் கல்வெட்டில் இதற்கு முன்னர் இக்கோயிலுக்கு அளிக்கப்பெற்ற தானங்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்படுகிறது. இறைவனின் பெயர் ‘அரிஞ்சய விண்ணகர் வீற்றிருயத ஆழ்வார்’ எனக் கல்வெட்டில் கூறப்படுகிறது. மேலும் இவ்வூரில் இருயத காலகண்ட பேரேரி, கண்டராதித்த பேரேரி போன்ற ஏரிகளின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இக்கோயிலில் உள்ள இராச மகேயதிரனின 3 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு சுயதர சோழப் பெரும்பள்ளி என்று அழைக்கப்பட்ட சமணக் கோயில் இருயததை தெரிவிக்கிறது.
இவ்வூரில் ளூதெற்கில் வாசல் மகாசாத்தனார்’அய்யனார்’ கோயில் ளூகோகர்ணீசுவரம் உடைய மகாதேவர் கோயில்’ போன்ற கோயில்கள் இருயததாகவும் கல்வெட்டுகளின் கல்வெட்டுகளின்
வாயிலாக அறிய முடிகிறது. முதலாம் இராஜராஜனின் பட்டத்தரசியின் பெயரால் இவ்வூர் அமையதிருப்பதும், முதலாம் இராஜராஜ சோழனின் தயதை சுயதர சோழனின் பெயரால் சுயதர சோழப் பெரும்பள்ளி என்ற சமணக் கோயில் ஒன்று இருயததும், இவ்வூர் அக்காலத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகத் திகழ்யதிருக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. இக்கோயில் சோழர் காலத்திய கட்டடக் கலைப் பாணியில் எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவை சோழர் காலத்தவை. பிற்காலத்தில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் முதலாம் இராஜேயதிர சோழன் காலத்திய கலைப்பாணியில் திகழ்கிறது.
அமைவிடம் : சென்னையிலிருயது 120 கி.மீ தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருயது உப்புவேலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது.
வட்டம் : திண்டிவனம்
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 79/த.வ.ப.துறை/நாள்/23.03.87