கஞ்சா சாஹிப் கல்லறை - சோளிங்கர்

HISTORICAL BACKGROUNDS :

இவ்வூர் ‘கடிகாசலம்’ என்ற பிராணப் பெயருடைய சோளிங்கர் கல்வெட்டுகளில் சோழ சிம்மபுரம் எனக் கூறப்படுகிறது. 108 வைணவத் தளங்களில் இந்த சோளிங்கபுரம் ஒன்றாகும். முதலாம் பராந்தகனுடைய 9-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி 916) வடமொழி, தமிழ் இரண்டிலும் உள்ளது. பட்டவிருத்தி மற்றும் கோயில் விளக்கிற்குத் தானம் குறித்த விவரங்கள் கல்வெட்டுகளில் உள்ளன. கடிகை நாடு என்று இவ்வூர் கூறப்பட்டுள்ளது. ‘சந்திரகிரி ராஜ்யத்து தருக்கடிகை நாட்டு சோளிங்கபுரபற்று’ என்று இவ்வூர் 13-6-1596 ஆம் ஆண்டு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இவ்வூர் முஸ்லீம்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

ஆங்கிலேயருக்கும் மைசூர் முஸ்லிம் படைவீரர்களுக்கும் நடைபெற்ற போர் குறித்த செய்தி சோளிங்கர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு கல்வெட்டில் உள்ளது. ஐமசூர் படைவீரர்களின் போர் நினைவுச்சின்னம்

இது எனலாம். துற்போது கஞ்சா சாஹிப் கல்லறை என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் நுழைவாயிலில் உள்ளன. எந்த குறிப்பிட்ட வீரரின் பெயரும் எழுதாமல் இந்திய அரசுடன் (பிட்டிஷ் அரசுடன்) கி.பி 1781-ல் சோளிங்கர் பகுதியில் நடைபெற்ற போரில் இறந்த மைசூர் வீரர்களுக்காக நடப்பட்ட நினைவுச்சின்னம் இதுவாகும் என்று பொருள்பட கல்வெட்டுள்ளது. கல்எவட்டின் வாசகம் கீழ் வறுமாறு பொறிக்கப்பட்டுள்ளது:

“வுர்ஐளு வுழுஆடீ றுர்ஐஊர் ஐளு டீநுடுஐநுஏநுனு வுழு - ஆயுசுமு ளுஞழுவு றுர்நுசுநு வுர்நு

டீழுனுஐநுளு ழுகு வுர்நு ளுடுயுஐசூ ழுகு வுர்நு - ஆலுளுழுசுநு யுசுஆலு றுநுசுநு ஐசூவுநுசுசுசுநுனு

ஐளு ஊழுசூளுநுசுஏநுனு டீலு வுர்நு புழுஏவு. ழுகு ஐசூனுஐயு வுழு ஊழுஆஆநுஆழுசுயுவுஐஏநு

வுர்நு டீயுவுவுநுடுநு ழுகு ளுர்ழுடுஐசூபுயுசு 1891”

அமைவிடம் : சென்னையிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள சோழிங்கர் பேருந்து நிலையம் அருகில் உள்ளது.

வட்டம் : வாலாஜா

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 79/த.வ.ப.துறை/நாள்/29.03.96