தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துக் கல்வெட்டுகள்

இந்திய அகர வரிசை எழுத்துக்களில் தொன்மையான எழுத்து பிராமி எழுத்தாகும். வட்டார வேறுபாடுகளுக்கு ஏற்ப இவ்வெழுத்து தமிழ்–பிராமி, அசோகன்-பிராமி, வடஇந்திய-பிராமி, தென்னிந்திய-பிராமி, சிங்கள–பிராமி என்று வகைப்படுத்துப்பட்டுள்ளது. இன்று இந்திய நாட்டில் உள்ள எழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து வளர்ச்சி அடைந்து வந்தவையே. மேலும் அகழாய்விலும், கள ஆய்விலும் அறியப்பட்ட பானை ஓடுகளிலும் ஆற்றுப் படுகைகளில் சேகரிக்கப்பட்ட காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் ஆகியவற்றில் தமிழ்–பிராமி எழுத்துகள் காணப்படுகின்றன.

தமிழ்–பிராமி கல்வெட்டுகள் ஏறத்தாழ தமிழகம் முழுவதும் பரவலாகக் கிடைக்கின்றன. கடல் கடந்த வணிகத் தொடர்பு காரணமாக சில பானை ஓடுகள், ஓர் உறைகல் ஆகியவை ஆட்பெயர்களுடன் எகிப்து, தாய்லாந்து ஆகிய இடங்களில் அண்மையில் அறியப்பட்டுள்ளன.

தமிழ்-பிராமி கல்வெட்டுகள் முற்காலத் தமிழ்-பிராமி, பிற்காலத் தமிழ்-பிராமி என கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையிலான கால எல்லையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்-பிராமி கல்வெட்டுள்ள இயற்கையான குகைத்தளம், மாமண்டூர், காஞ்சிபுரம் மாவட்டம்

ஆனைமலை, மதுரை மாவட்டம்

‘சமுதஹ’ என்று எழுத்துள்ள ரௌலெட்டட் ஓடு (இந்திய வகை) அழகன்குள்ம், இராமநாதபுரம் மாவட்டம்

தமிழ்-பிராமி கல்வெட்டுள்ள இயற்கையான குகைத்தளம், குடுமியான் மலை, புதுக்கோட்டை மாவட்டம்

1) இவ குன்றது உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் 2) அந்துவாயி அரட்ட காயிபன் என்றுள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகள் கி.பி. ஆம் நூற்றாண்டு ஆனைமலை, மதுரை மாவட்டம்

‘ஸதியபுதோ அதியன் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி’ குகைத் தளத் தமிழ் – பிராமி கல்வெட்டு கி.மு. முதலாம் நூற்றாண்டு ஜம்பை, திருவண்ணாமலை மாவட்டம்

‘எருமி நாடு குமுழ் ஊர் பிறந்த காவுடி தென்கு சிறு போபில் இளயர் செய்த அதிட்டனம்’ – கற்படுக்கைத் தமிழ் பிராமி கல்வெட்டு கி.மு. முதலாம் நூற்றாண்டு, சித்தன்னவாசல், புதுக்கோட்டை மாவட்டம்

1) கொற்றந்தவன் 2) முன்று கற்படுக்கைத் தமிழ்-பிராமி கல்வெட்டு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டு, ஆறுநாட்டார் மலை, புகளூர், கரூர் அருகில்

‘பேர அவதன்’ – தமிழ்-பிராமி எழுத்தில் ஆட்பெயர், கி.பி முதல் நூற்றாண்டு, வெள்ளி மோதிரம், கரூர்

’நெடுங்கிள்ளி’ – தமிழ்-பிராமி எழுத்துள்ள கருப்புச் சிவப்பு பானை ஓடு கி.பி. முதலாம் நூற்றாண்டு, தேரிருவேலி, இராமநாதபுரம் மாவட்டம்.