பாதுகாக்கப்பட்ட கல்வெட்டுகள்

பழைய கோயில்களைப் புதுப்பிக்கும் இன்றைய திருப்பணியாளர்களின் அறியாமையின் காரணமாகவும், பழமை போற்றும் மனப்பாங்கு இல்லாமையாலும் பல கல்வெட்டுகள் அழிந்து வருகின்றன. கல்வெட்டுகள் உருவம் சிதைக்கப்பட்டும் துண்டுகளாக்கப்பட்டும் சேதமடைகின்றன.

பல இடங்களில் தரையில் பாவுக் கற்களாகப் பதிக்கப்படுகின்றன. புதிய கட்டடங்களில் வைத்துக் கட்டப்படுகின்றன. இந்நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உதிரிக் கற்களாகச் சிதறிக் கிடக்கும் கல்வெட்டுக் கற்கள் ஒரு சேர சேர்க்கப்பட்டுப் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும். தொல்லியல் துறைக்கு அவை பற்றிய தகவல் தரப்பட வேண்டும். அருங்காட்சியகங்கள், அகழ்வைப்பகங்களில் அவை சேர்க்கப்பட வேண்டும். ஆர்வமுள்ள பொது மக்களின் இவ்வகைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.

கோயில் சுவர்களிலிருந்து சிதறிய கல்வெட்டுகள் தரையில் தனிக்கற்களாகப் பாவப்பட்டுள்ளன.

கோயில் சுவர்களிலிருந்து சிதறிய கல்வெட்டுகள் தரையில் தனிக்கற்களாகப் பாவப்பட்டுள்ளன.