பிறமொழிக் கல்வெட்டுகள்

ஹீப்ரூ கல்வெட்டு

சென்னை தங்கசாலையில் உள்ள ஜீவிஷ் இடுகாட்டில் கல்லறைகளில் ஹீப்ரூ கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

பஹ்லவி கல்வெட்டுகள்

தாம்பரம் வட்டம் செயிண்ட் தாமஸ் மவுண்ட் தேவலாயப் பகுதியில் 1547-ல் போர்ச்சுக்கீசியர்கள் சிதைந்து கிடந்த குவியல்களை அகற்றிய போது ஒரு கல்லால் ஆன சிலுவையினை கண்டறிந்தனர். அதனில் பஹ்லவி (பாராசீக மொழி) மொழிக் கல்வெட்டுள்ளது. இச்சிலுவைக் கல் தற்பொழுது மேற்சொன்ன தேவாலயத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி கி.பி. 11 ஆம் நூற்றாண்டு ஆகும்.