மராத்தி எழுத்துக் கல்வெட்டுகள்

மராத்தியர்கள் கி.பி. 1674-ல் தமிழகத்தினுள் நுழைந்து வெற்றி கண்டு கி.பி. 1730-ல் காவிரி டெல்டா பகுதியில் நிலை பெற்றனர். தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 1855-ல் ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனி அவர்களது நிர்வாகத்தைக் கைப்பற்றும் வரை ஆட்சி செய்தனர்.

அவர்கள் அவர்களது கொடைகளையும் அரசு நடவடிக்கைகளையும் மராத்தி மற்றும் தமிழ் எழுத்துகளில் கல்வெட்டுகளாகவும் செப்பேடுகளாகவும் பதிவு செய்தனர். மராத்தி கல்வெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், தர்காக்கள், குளங்கள், நீர்ச்சுனைகள், சத்திரங்கள், மருத்துவமனைகள், நினைவுக் கோபுரங்கள், அரண்மனைகள், நிலங்கள், பாலங்கள், கொடிக்கம்பங்கள், செப்புத் திருமேனிகள், திருப்பரிகலன்கள், பதக்கங்கள், கல்லறைகள், இடுகாடுகள் என்று பலவற்றிலும் காணப்படுகின்றன. தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டு, மனோரா கோபுரக் கல்வெட்டு, தஞ்சை அரண்மனைக் கல்வெட்டு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தஞ்சை மராட்டா அரண்மனையில் உள்ள கல்வெட்டு