நூலகம்

Slide background
Slide background
Slide background

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நாட்டிலேயே சிறந்ததொரு நூலகத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்நூலகத்தில் ஏறத்தாழ 13,300 ஆய்வு நூல்கள் உள்ளன. இவற்றில் தொல்லியல், மானிடவியல், கலை, இலக்கியம், வரலாறு, கல்வெட்டு ஆகியன தொடர்பாக வெளிநாட்டு அறிஞர்களும், இந்திய அறிஞர்களும் எழுதிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. மறுபதிப்பு மற்றும் சேகரிப்பில் உள்ள மிகப்பழமையான ஆய்வு நூல்களும், மஞ்சரிகளும் இதில் அடங்கும் உதாரணமாக Indian Antiquary 60 தொகுதிகளும், Asiatic Researches  24 தொகுதிகளும் இங்கு உள்ளன. 
சமயஞ்சார்ந்த மறுபதிப்பு நூல்கள் 50 தொகுதிகளும் இதிகாசத்தொகுதிகள் 40-ம் இந்நூலகத்தில் உள்ளன. கலை, தொல்லியலில் நல்ல திறம் வாய்ந்த ஆய்வு நூல்களைக் கொண்டிருக்கும் நூலகங்களில் இதுவும் ஒன்றாகும். 
இந்நூலகம் 1963-ஆம் ஆண்டு 300 நூல்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது ஏறத்தாழ 13,300 நூல்களும் பருவ இதழ்களும் உள்ள இந்நூலகம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் தலைப்புகளில் நூலகத்தில் உள்ள நூல்களை வகைப்படுத்தலாம். 

மேலும் படிக்க...