தர்மபுரி அகழ்வைப்பகம் - தர்மபுரி

Get Direction / Information

வேலை நேரம்

: 10.00 a.m to 5.00 p.m

விடுமுறை

: வெள்ளிக் கிழமை

அதிகாரி

:Thiru S.Selvakumar, Curator-I/C

தொலைபேசி

: ------------

 

 

தருமபுரி மாவட்டத்தின் வரலாறு கி.மு. 5000 முதல் அதாவது புதிய கற்காலம் முதல் தொடங்குகிறது. பண்டைய காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சமுதாயத்தின் நன்மைக்காக, உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்காக நடுகற்கள் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது. அவ்வீரர்கள் அப்பகுதி மக்களைக் கொடிய விலங்குகளிலிருக்கும், பிற பழங்குடியினரிடமிருந்தும் காத்து வந்துள்ளனர். அவர்களுக்காக எழுப்பப்பட்டவை வீரக்கற்கள் அல்லது நினைவுக் கற்கள் எனப்பட்டன.

அதிக அளவிலான நடுகற்கள் இப்பகுதியில் தான் காணப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு நடுகல்லாவது காணப்படுகின்றது. இந்நடுகற்கள் கி.பி 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 17-ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தைச் சார்ந்தவையாகும்.

காட்சிப்பொருட்கள்:

புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலப் பொருட்கள். கத்தி, குறுவாள், ஈமத் தொட்டிகள், தாழிகள், மூன்று கால்கள் மற்றும் ஐந்து கால்களை உடைய சாடிகள், துர்க்கை மற்றும் சமண சமய, புத்த சமயச் சிற்பங்கள், சுடுமண்ணால் ஆன உருவங்கள், விளக்குகள் மற்றும் குழாய்கள், காசுகள், பதக்கங்கள், பீரங்கிகள், மரப்பொருட்கள், செப்புப் பொருட்கள், இரும்புப் பொருட்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவையாகும். இவ்வகழ்வைப்பகத்தில் 25 வீரக்கற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

1979-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அகழ்வைப்பகம் வீரக்கற்களின் அகழ்வைப்பகமாகத் திகழ்கின்றது.