யார் யவர்

திரு. மு.க. ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

திரு. தங்கம் தென்னரசு
மாண்புமிகு தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள் துறை அமைச்சர்
மருத்துவர் பி. சந்தர மோகன் இ.ஆ.ப.,
அரசு முதன்மைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
முனைவர் இரா. சிவானந்தம்
ஆணையர் [முழுக் கூடுதல் பொறுப்பு], தொல்லியல் துறை
தொல்லியல் துறை பற்றிய தகவல்கள்
தமிழ்நாட்டின் தொல்லியல் சிறப்புகளை வெளிப்படுத்தவும், ஆய்வு செய்யவும், பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1961 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. தமிழ்நாடு மொழி, பண்பாடு, கலை, வரலாறு அனைத்திலும் சிறப்புடைய ஒரு தொன்மையான மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் சிறப்புமிக்க பழமையான பண்பாட்டு வரலாற்றுக் கூறுகளை வெளிப்படுத்தவும், செம்மொழியாம் தமிழின் தொன்மையினை நிலைநிறுத்தவும், எழில்மிகு கோயில்கள், கலைநயமிக்க சிற்பங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், பண்டைய சமுதாயத்தின் பல்முனைக் கோட்பாடுகளை வெளிக்கொணரும் வகையிலும் தொல்லியல் துறை செயலாற்றி வருகிறது. அலுவலக அமைப்பு: தொல்லியல் துறையின் தலைமை அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது.இங்கு கல்வெட்டுப் பிரிவு, கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம், நூலகம், நிழற்படப் பிரிவு, அச்சுப் பிரிவு ஆகியன இயங்கி வருகின்றன.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளும் பொழுது கிடைக்கும் தொன்மையான கலைப்பொருட்கள் அப்பகுதியிலேயே சேகரிக்கப்படும் கலைப்பொருட்களுடன் (வரலாற்றுக் காட்சியகங்கள்) அகழ்வைப்பகங்களில் காட்சிக்காக வைக்கப்படுகின்றன. தொல்லியல் துறையின் கீழ் அரசு கீழ்த்திசை ஓலைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வி மையமும் இயங்கி வருகிறது.
1869 ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்ற இந்த ஆய்வு மையத்தில் பல அரிய ஓலைச்சுவடிகளும், புத்தகங்களும் தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, பாலி, உருது, அரபு, பாரசீகம், சிங்களம் ஆகிய மொழிகளிலும், கணிதம், வானவியல், சித்த-ஆயுர் வேத, யுனானி மருத்துவம், வேதம், ஆகமம், கட்டடக்கலை, இசை, சிற்பம், நுண்கலை, வரலாறு, இலக்கணம், இலக்கியம் போன்ற பல துறைகளிலும் உள்ளன. ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகின்றன.
|