இரசாயன ஆய்வகம் - பாதுகாப்பு

தொல்லியல் இரசாயனக் கூடங்கள் 1980-ஆம் ஆண்டு முதல் இத்துறையில் இயங்கி வருகின்றன. பழமையான மரபுச் சின்னங்களைப் பாதுகாத்தல் கலைப் பொருட்களான காசுகள், ஓவியங்கள், செப்புப் பட்டயங்கள், மரத்தினால் ஆன தொல்பொருள்கள் ஆகியவற்றை முறையாகப் பாதுகாப்பதே இப்பிரிவின் முக்கிய பணியாகும். மேலும், ஓலைச் சுவடிகள், மரப்பொருள்கள், காகித ஆவணங்கள், வண்ண ஓவியங்கள், கற்சிற்பங்கள், சுடுமண் பொம்மைகள், சுதை உருவங்கள், படிமங்கள் கிளிஞ்சல்கள், வண்ண மணிகள், செப்புத் திருமேனிகள், போர்க் கருவிகள், காசுகள் முதலிய தொல்பொருள்கள் வேதியல் முறையில் தூய்மை செய்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் அழிந்து போகும் நிலையில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகள் மிக கவனமாக வேதியல் முறையில் தூய்மை செய்து பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர தூசி, எண்ணெய் படிந்த மரப் பொருள்களும் வேதியல் முறையில் தூய்மை செய்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.